பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

200


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 200

இவ் வொருமையுணர்வு பெருமை அதிகாரத்துள் ஆணுக்கும் வலியுறுத்தப் பெறகிறது. (974). அங்கும் அவ்வுணர்வு உண்டாகப் பெறுதல் போல் தன்னைத்தான் கொண்டு ஒழுகுதல் என்றும் விளக்கப் பெறுகிறது. - இவ்வொருமை உணர்வுச் சொல், பெண்ணடிமைச் சுட்டுச் சொல்லன்று; பெண்ணுரிமையினை உறுதிப்படுத்தும் தன் னொழுக்கச் சொல் - என்க. ஒழுக்கப் படுத்துதல் அடிமைப்படுத்தலாகாது. அதேபோல் ஒழுக்கமிழத்தல் உரிமையுமாகாது. “ . - இப்பொதுநெறி, திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் உகந்த நெறியாகவே இந் நூாலுள் வலியுறுத்தப்பெறுகிறது. -இனி, தமிழியலில் கற்புநெறி பொதுவானதுபோல், ஆரிய வியலில் இது பொதுவாக்கப் பெறவில்லை. அங்கு, இது பெண்ணுக்கேயுரிய அடிமைநெறியாக வலியுறுத்தப்பெறுகிறது. - இதன் விரிவான விளக்கங்களை எம் நிறைவுரையில் கண்டு தெளிக - " . -இனி, கற்பென்னும் திண்மை என்று கூறுவதால் பெண்மையுளம், அவருடல் போலவே மென்மை வாய்ந்ததும், அது வன்மை திண்மை) பெறுதல் வேண்டும் என்பதும் குறிப்பால் உணர்த்தினார் என்க.

-'கற்பு என்பதைப் பரிமேலழகர் கலங்கா நிலை என்றார். அதை

நெகிழாநிலை என்பது மிகப் பொருந்தும்.

4. இச் செய்யுளின் வழி, மனைவி ஒருத்திக்கு அவள் மனவுறுதியே, ஒரு கணவன் பாங்கில் அமைந்த யாவையினும, அவனுக்குப் பெருமை தருவது என்பதும், அதுவே அவளுக்கும் சிறப்புத் தருவது என்பதும் பெறப்பெற்றன. இஃது இல்லவள் மாண்புகளில் சிறந்த பண்புணர்வாகையால், அதன் பின் வைக்கப்பெற்றது. O

குரு தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. * . . ... 55

பொருள் கோள் முறை : இயல்பு ெ நிப் ாை : குடும்ப முன்னோர், குல முதல்வோர், மக்கள் நலம் கருதி

வாழ்ந்து மறைந்த அறச்சான்றோர் முதலாய தெய்வங்களை, மணமாகிய பின்னை ஓர் இல்லக்கிழத்தி தொழமாட்டாள். அவள் தன் பற்றுக் கோடிாகிய கொழுநனையே ஒவ்வொருநாள் காலையிலும் மனத்தால்