பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 அ - 2 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6

தொழுது, படுக்கையினின்று எழும் வழக்கவுணர்வு கொண்டவள்;

அத்தகையவள் பெய் எனக் கூறின் மழை பெய்யும்.

சில விளக்கக் குறிப்புகள் : .

. 1. தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் முந்தைய குறளில், கற்பென்னும் ஒருமை மனவுறுதிப்பாட்டை முன்வைத்துக் கூறியவர், இதில் அவ்வுறுதிப்பாடு என்னென்று விளக்கினார் என்க. அஃதுதாவது, கொடிபோல ஒரு பற்றுக் கோடின்றி அலைந்து நின்ற தனக்குப் பற்றிப் படரும் ஒரு கொழுகொம்பாய் நின்றானைத் தனக்கு வாழ்வளித்த தெய்வமாய்க் கருதி, அவன்மேல் பத்திமை கொண்டு, ஒவ்வொருநாள் காலையிலும் துயிலெழுகையில், அவனை மனத்தால் வழிபட்டு எழவும், அவனையன்றி வேறு வாழ்ந்து சென்ற மூவகை மாந்தத் தெய்வங்களையும் அவ்வாறு தொழாதிருக்கவும் ஆன வழக்கத்தைக் கொண்டாள் என்று அவளின் மன ஒருமை உறுதியைச் செயலாலும் பெருமைப்படுத்திச் சொன்னார் என்க.

மூவகைத் தெய்வம், குடும்ப முன்னோரும், குல முதல்வோரும், மக்கள் நலம் கருதி வாழ்ந்து மறைந்த அறச் சான்றோரும் என்க.

குலம் சாதியன்று. மரபினம் என்க.

மரபினம் மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும், பண்பாட்டாலும், நாகரிகத்தாலும், கலை, இலக்கியக் கூறுகளாலும் ஒன்றுபட்டுத் திகழும் மக்கள் தொகுதி. x

- இம் மூவகைத் தெய்வங்களும் அவரவர் மனைவிக்குக் கணவர் ஆகையால், பிறபெண்டிர்க்குரிய கணவரை வணங்காது, தன் கணவனை வணங்குதல், பேரன்பும், ஒருமைக் காதலுணர்வும், மனவுறுதியும், உயர்மதிப்பும் கொண்ட நன்றியுணர்வினான் என்க. வணக்கத்திற்குரியவர் யாவராயினும் யாவர்க்காயினும் அவர்களும் இத்தகையோரே ஒருவரை வணங்குதல் - தொழுதல் - பிழையன்று; அவர் நெறிப்படும் ஒரு மனவுணர்வு அது. இது மக்கள் தொடர்புக்கு அடிப்படையானது. பிற உயிரினங்கட்கு இவ்வுணர்வுநிலை இல்லை

、茹s、 . - -

- இக்குறள், கால, அறிவு, அறிவியல், தன்மான, தன்மதிப்பு, சமநிலையுணர்வு, வளர்ச்சியில் பலவாறான கொள்கைச் சிக்கலுக்குரியதாக விருப்பினும், நூலாசிரியர் காலத்து, மக்கள் நன் மனவுணர்வே பெருமதி மதிக்கத் தகுந்ததாக இருந்ததாலும், குடும்ப அமைப்பையே பிற அனைத்து, வாழ்வியல் கூறுகளினும், அறங்களினும் உயர்வாகக் கருதியதாலும் கருதுக

அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை (49 ) அக்குடும்ப அமைப்பிற்கு