பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

204


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 204

பாற்பட்டதன்று. அறிவின்பாற்பட்டதெனிற்றான் அது பெண்ணடிமை ஆகும் என்க.

3. இஃது, இல்லறம் மேவிய ஒருத்திக்கு ஒருமை மனவுறுதி வேண்டும் என்று வலியுறுத்தியதும், இன்றெனில் இல்லறம் சிதைவுபடும் என்பதும் என்க.

4. இதன் மேலான, பிற அனைத்து விளக்கங்களையும் எம் நிறைவுரையுள் காண்க Ꭴ)

ருசு தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். . 56

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : (உடலாலும் உள்ளத்தாலும் அறிவாலும் தன்னை முதலில் தற்காப்புச் செய்துகொண்டு, (தான் செலுத்தும் அதே போலும் அன்பாலும் அக்கறையாலும் ஈடுபாட்டாலும் நம்பிக்கையாலும்) தன்னை ஒரு துணையாகக் கொண்டவனாகிய கணவனையும் (தன்னைப் போல) பேணிப்புரந்து, தன்னைப் பற்றியும், தன் கணவன், குடும்பத்தார் இவர்களைப்பற்றியும், பிறர் மதிப்பிட்டுத் தகுதிகூறும் பெருமை பொருந்திய பாராட்டு மொழிகளுக்குத் தன்னால் ஏதம், குற்றம், இழுக்கு இழிவு, எதுவும் வராமல் காத்து, இம் முயற்சிகளால் உள்ளத்தாலும் உடலாலும்) சோர்வு தளர்ச்சி) அடையாதவளே, கடமை சான்ற இல்லறத் துணைவியாவாள். - .

சில விளக்கக் குறிப்புகள் :

1. தற்காத்து : தன்னை முதலில் தற்காப்புச் செய்துகொண்டு. குடும்ப நிலையில் அவரவர்களும் தங்கள் தாங்கள் நலம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பார்களாகையால், அவர்கள் அனைவர்க்கும் அடிப்படை நலனுக்கு உகந்தவளாகிய தன்னை எவரும் கவனிக்க மாட்டார்கள் என்பது உலக நடைமுறையாயிருப்பதை நன்கு கவனித்த ஆசிரியப் பெருமான், மனைவி ஒருத்திக்கு முதலில் தானே தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். - ? .. பல குடும்பங்களில், வெளியே சென்ற கணவன், வீடு திரும்பும் வரை காத்திருந்து, நெடுநேரமாயினும், அவனுக்கு உணவருத்தி அதன்பின்