பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

206


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 206

அதில், கணவனாலும் பிள்ளைகளாலும் பிறராலும் வருகின்ற ஏதம், இழுக்குப் போலவே, மனைவியாலும் வரக்கூடாதென்னும் அவட்குரிய கடமையையும் பொறுப்பையும் இங்கு உணர்த்துவார்.

இதில், இன்னொன்றும் உணரத்தக்கது. அது, மற்ற பிறரால் குடும்பத்திற்கு வரும் ஏத, இழுக்குகளைவிட, ஒரு குடும்பத் தலைவியால் வரும் தாழ்வு நிலைகளே மிகுதியும் உலகினரால் சுட்டிப் பேசப்பெறுவ்ன ஆகலின், அவை தன்னால் வராமல் காத்துக்கொள்வது தன் கடமைகளுள் தலைசிறந்ததும் இல்லறத்திற்கே அடிப்படையானதும் என்பது.

4. சேர்விலான் பெண் : இம் முயற்சிகளிலெல்லாம் உள்ளத்தாலும் உடலாலும் சோர்வு அடையாதவளே கடமைசான்ற இல்லத்துணைவியாவாள். சோர்வு தளர்ச்சி - மனச் சலிப்பு.

5. இந்தக் குறட்பாவால், கடமை சான்ற இல்லக் கிழத்தியின் நால்வகைக் கடமைகள் கூறப்பெற்றன. ஒன்று, தன்னை உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் காத்து நிலைப்படுத்திக் கொள்ளல். இரண்டு, தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் அதே அன்பொடும், அக்கறையொடும், ஈடுபாட்டொடும், நம்பிக்கையோடும் பேணிப் புரத்தல், மூன்று, தொடக்கத்திலிருந்து இறுதிவரை அக்குடும்பத்திற்கும் தனக்கும் உள்ள பெருமையைக் காத்துக் கொள்ளுதல். நான்கு இக்கடமை முயற்சிகளையெல்லாம் செய்து வரும் பொழுது, உள்ளத்தாலும், உடலாலும் தளர்ச்சியின்றி ஊக்கத்துடன் இயங்குதல். O

ருள) சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை. 57

பொருள் கோள் முறை :

மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை.

பொழிப்புரை உள்ளத்தாலும் உடலாலும் தவறு செய்யாமல் இருக்க வேண்டித் திருமணம் ஆன பெண்டிரைச் சிறையுள்வைத்துக் காப்பதுபோல் காக்கும் காவல் என்ன விளைவைத் தரும்? (அவர்கள் மனம் வைத்தால் அக்கட்டுக்காவலை மீறியும் தவறு செய்யமுடியுமாகையால் ஒரு