பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

208


ருஅ பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.
58

பொருள் கோள் முறை :

பெற்றான் பெறின், பெண்டிர் புத்தேளிர்
வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர்.

பொழிப்புரை: தம்மை அனைத்துத் தகுதியானும் மனம் ஒப்பி மனைவியராக ஏற்றுக்கொண்ட ஆடவரைத் தாமும் அனைத்துத் தகுதியானும் மனம் ஒப்பிக் கணவராக ஏற்றுக் கொள்ளின் அத்தகைய பெண்டிர், தேவர்கள் வாழ்வதாகக் கருதப்பெறும் இன்பவுலகில், பெருமை மிக்க சிறப்புச் செய்யப் பெறுவர்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. பெற்றான் : மனைவியாகப் பெற்றான், மனைவியாகக் கொள்ளப் பெற்றான், மனைவியாக ஏற்றுக் கொள்ளப் பெற்றான். செயப்பாட்டுவினை செய்வினையாகி நின்றது.

இனி, மனைவியாக ஒரு பெண் ஒருவனால் ஏற்றுக் கொள்ளப்பெற வேண்டுமானால், அதற்குரிய தகுதிகளை அவள் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகையவளைத்தான் அவன் மனம் ஒப்பி, மனைவியாக ஏற்றுக் கொள்ளப் பெறுவான் என்க.

2. பெறின் ; அதே நிலையில் அவனும் அவளால் கணவனாக

ஏற்றுக்கொள்ளப்பெறின். அப்பொழுதுதான் இருவர் மனமும் ஒன்றுபட்டு இல்லறம் நடத்த முடியும் ஆகையான்.

3. பெற்றான் - பெண்டிர். ஒருமை பன்மை மயக்கம்

4. பெறுவர், பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகு : தேவர் வாழும் உலகம்.

- புத்தேளிர் என்பார் தேவர் என்ற கருதுதற்கு பொருளடிப்படை விளங்குமாறில்லை. வெறும் இடுகுறிப் பெயராக நிற்கும் இச்சொல் லுக்கு எந்நூாலிலும் வேறு விளக்கமும் இல்லை. எனினும் நூலாசிரியர் காலத்து இச்சொல், தேவர்களைக் குறித்ததாகவும், அவர்கள் வாழும் உலகம் தேவர்கள் வாழும் உலகம் என்பதாகவும், அஃது ஒர் இன்பவுலகம் என்பதாகவும் கற்பனையால் கருதப்பெறும் உலகமாக இருந்துள்ளது என்று தெரிகிறது. இஃது ஒரு மனவியல்