பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

9


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 9

அறம் என்று சிறப்பித்துக் கூறும் கூற்றே முதற்கண் இல்லறவியலைத் தான் சாரும் என்பது விளங்க அறத்துப்பாலின் முதற்கண் இல்லறவியல் கூறுகளைக் கூறுவதிலிருந்தே நன்கு புலப்படும் என்க. இவ்வுண்மையை நன்கு வலியுறுத்த,

'அறன் எனப்பட்ட்தே இல்வாழ்க்கை 48

என்பதானும், இது துறவறத்தினும் மேம்பாடுடையது, என்பதை வலியுறுத்த,

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன் - 46 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை . ... 47 ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து – 48 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் . - 50

என்பவற்றானும் நன்கு விளங்கும் என்க. இத்தகைய இல்லறவியலை துறவறத்தினும் மேம்படுத்திக் கூறும் கூற்றுகளைத் தமிழ் இலக்கியங்களுள் வேறெங்கணும் தெளிவுறக் காணுதல் இயலாதாம் என்க. .

இனி, திருவள்ளுவர் காட்டும் துறவறமும், இல்லறத்தில் நன்கு .” ஈடுபட்டு, அறஞ்செய்து, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்தவர், தம் முதுமைக்கண் கடைப்பிடித்தொழுகும் பொதுவுணர்வு பொதுளிய பொது மக்கள் தொண்டே என்பதும், அவர் துறவியலில் கூறும் பற்பல கருத்து களானும் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது. அத்தகைய துறவறம் மணக்கும் சிறந்த கருத்துகளைக் கீழே காண்க

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள – 241

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் -

- - 242 بین

தேரினும் அஃதே துணை அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் & –243

'மன்னுயிர் ஒம்பி ೨೮Tiramäeು இல்லென்ப . தன்னுயிர் அஞ்சும் வினை – 244