பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7


அஃதொரு 'நிறைவெண்' என்றும் 'நீண்ட காலத்தைக் குறிப்பது' என்றும் தாம்கொண்ட தவற்றுக்கு அமைவு கூறுவார்.

1-ஈ) இஃதிவ்வாறிருக்க, உரையாசிரியர் சிலர், 'எழுபிறப்பு' என்பதற்கும் 'எழுமை' என்பதற்கும் 'பல தலைமுறைகள்' என்றும் 'வாழ்நாள் முழுமையும்' என்றும், 'வாழ் நிலை', வாழ்க்கை, தோற்றம் - என்றும் பலவாறாக, அவ்வவ்விடங்களுக்குத் தக்கபடி பொருள் கூறி நிறைவுறுவர்.

2.இவையில்வாறாக, நூலாசிரியர் பிறவிகள் பல என்ற கருத்துள்ளவராகத் தெரிகின்றாரே தவிர, ஏழு பிறவி என்பதையோ, ஏழுவகைப் பிறவி என்பதையோ, ஒரே உயிர், புல்லாய்ப், பூண்டாய், நீருயிராய், ஊர்வனவாய், பறப்பனவாய், மடங்கி நடப்பனவாய், நிமிர்ந்து நடக்கும் மாந்தராய், ஒரு வகையில் படிநிலை வளர்ச்சி வட்டத்துள் பிறந்து பிறந்து மேம்பாடடையும் என்பதையோ, கருதுபவராக நூலுள் உய்த்துணர்வுக்கும் வழிவகுத்தாராகத் தம்மைக் காடடிலா.

1)எனவே, நூலாசிரியர் அவர் பயன்படுத்தியுள்ள எழுமை என்பதற்கும், 'எழுபிறப்பு' என்பதற்கும் வேறு வேறு பொருள் கொண்டவராகவே, அவை பயன்படுத்தப்பெறும் இடங்களைக் கொண்டு உய்த்துணர வேண்டியுள்ளது.

- இவ்விடத்து வேறு வேறு பொருள்கள் அஃதாவது, இரண்டு சொற்களுக்கும் இரண்டு தனித்தனிப் பொருள்கள் கொண்டார் என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இரண்டுக்கும் மேற்பட்டு, அவ்வவ்விடங்களுக்குத் தக்கபடி மூன்று, நான்கு ஐந்து, ஆறு என்னும் பலவகையான பொருள்களைக் கொண்டார் என்று உறுதியாகக் கருத முடியாது. அவ்வாறு கருத சொல்லளவிலோ, இட அளவிலோ, கருத்தளவிலோ எவ்வகை வாய்ப்பும் இல்லை என்க.

இனி, இன்னொன்றையும் நாம் இங்குக் கருதுதல் வேண்டும்.

அஃதாவது, எழுமை என்னும் சொல் திருக்குறளில் தவிர, கழக இலக்கியங்களுள் வேறு எங்குமே வரவில்லை. அதேபோல் எழுபிறப்பு, "எழுபிறவி என்னும் சொற்களும் கழக இலக்கியங்களுள் இல்லை.

- இனி எழு என்பது ஏழு எனும் எண்ணிக்கைப் பொருளிலும், ஏழு என்பது எழு என்று குறுகியும் கழக இலக்கியங்களுள் வருகின்றன.

எழுபொறி, எழுமகளிர், எழுமரம், எழுமீன், எழுமுடி, எழுவகை என்பனவாக எழு எனும் எண்ணும் பொருளடைச்சொற்கள் அங்குக் குறிக்கப் பெறுகின்றன.