பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6


மும்மீன், மும்முரசு, மும்மை மும்மூர்த்தி, மூவரசர், மூவுலகம், மூவெயில், மூவுடல், மூவான்மா முதலியன.

வடமொழி வழக்கு : திரிகந்தம், திரிகரணம், திரிகாலம், திரிகுணம், திரிகோணம், திரிகண்டம், திரிசூலம், திரித்துவம், திரிபலை, திரிபிடகம், திரிபுரம், திரிமலம், திரிலோகம், திரிவர்க்கம் முதலியன. திரி - மூன்று

நான்கு :

தமிழ் வழக்கு : நாற் சாந்து, நாற்சேனை, நால்வகைத் தோற்றம் (நிலம்) (அண்டஜம், பை (சுவேதஜம்) முட்டை (சராயுஜம்), வெயர்வை (உற்பீஜம், நால்வகைப் பண், நால்வகைப் பூ, நால்வகை யாழ், நால் வகை உபாயம், நால்வகை யூறுபாடு, நால்வேதம், நாற்கணம், நாற்கதி, நாற்குணம், நாற்படை, நாற் பால்மரம், நாற்பொருள், நாற்றிசை, நானிலம், நாற்கரன் முதலியன.

வடமொழி வழக்கு : சதுராச்சிரமம், சதுருபாயம், சதுர் யுகம், சதுர் வேதம், சதுருப வேதம், சதுர்க்குணி, சதுர்க்குணன், சதுர்முகன், சதுர்வர்ணம், சதுரகராதி, சதுரங்க சேனை - முதலியன. (சதுர் - நான்கு

ஐந்து :

தமிழ் வழக்கு : ஐங்கணை, ஐங்கதி, ஐங்கலை, ஐங்காயம் (ஐங்காவியம், ஐங்குரவர், ஐங்காட்டு நெய், ஐம்பால், ஐங்கோச்ம் ஐந்துடம்பு, ஐங்கோணம், ஐந்தாற்றல், ஐஞ்சாத்தகம், ஐந்தங்கம், ஐந்தடக்கல், ஐந்தவத்தை, ஐந்தாற்றல், ஐஞ்சாத்தகம், ஐந்தங்கம், ஐந்தடக்கல், ஐந்தவத்தை, ஐந்திணை, ஐம்புலன், ஐந்திலக்கணம், ஐந்துணவு, ஐந்துபா, ஐந்துப்பு, ஐந்தொகை, ஐந்தொழில், ஐமலம், ஐமுகம், ஐம்படை, ஐம்பால், ஐம்பான்முடி, ஐந்தாலயம், ஐம்பூதம், ஐம்பெருங் குழு, ஐம்பெருங்கேடு (பாதகம்), ஐம்பொறி, ஐம்பெரு வேள்வி, ஐம்பொன், ஐயாறு, ஐங்குரவர், ஐந்தாயர், ஐமணி, ஐம்பொழுது, ஐம்பாதம், ஐம்பூ ஐமுடி, ஐவகை மெய்க்குற்றம், ஐவகையாகம், ஐவகையுணவு, ஐவகைவினா, ஐவகைவேள்வி, ஐங்குளியல், ஐவளம் - முதலியன.

வடமொழி வழக்கு : பஞ்சபூதம், பஞ்சேந்திரியம், பஞ்சாண்டம், பஞ்சலிங்கம், பஞ்சமுகம், பஞ்சாகாரம், பஞ்சலவணம், பஞ்சாவங்கை முதலியன. (பஞ்ச ஐந்து)

தமிழ் வழக்கு: அறுகுணம், அறுசமயம், அறுசுவை, அறுதொழில், அறுபகை, அறுபடை, அறுபருவம், அறுவகைத்தானை, அறுவழக்கு, அறுவிகாரம், ஆறாண், ஆறாதராம் முதலியன.