பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

224


வட மொழி வழக்கு : ஷண் மதம், ஷத் பிரஞ்ஞன், ஷண்முகம் . முதலியன.

ஏழு :

தமிழ் வழக்கு : எழு பிறப்பு, எழு நரகம், எழு பூதரம், எழுதீவு, எழு கடல், எழுமதம், எழுமதநீர், எழுமலை, எழு முனிவர், எழு மேகம், ஏழு தான்யம், ஏழு கடல், ஏழுவகைப் பெண் பருவம், எழு வகையளவு, ஏழிசை, ஏழுபாலை, ஏழு புரம், ஏழு வள்ளல்கள் முதலியன.

வடமொழி வழக்கு : சப்த சந்தானம், சப்த சமுத்திரம், சப்த சுரம், சப்த சைலம் (ஏழில்மலை, சப்த தீவம், சப்த நதி, சப்த நரகம், சப்பங்கி, சப்த பதார்த்தம், சப்த பாஷாணம், சப்த பாதாளம், சப்த பிரணாயாமம், சப்தபுரி, சப்த மண்டலம், சப்தமிருத்து (ஏழு மண்டிலங்களிலுள்ள வாயு, சப்த நாகம், சப்தரிஷிகள், சப்தரிஷி மண்டலம், சப்த லோகம், சப்த வர்க்கம், சப்த கன்னிகை, சப்த குலாrலம் இமயம், ஏமசுடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தியம் ஆகிய ஏழு மலைகள்) சப்தகருவி, சப்த தாது, சப்த தந்தி, சப்த தீர்த்தம், சப்த மாதர், சப்த வர்க்கம், சப்தாவஸ்தை முதலியன. (சப்த - ஏழு)

எட்டு :

தமிழ் வழக்கு : எண் குணம், எண் குற்றம், எண் சுவை, எண்டிசை, எண் தோளன், எண் தோளி, எண் பதம், எண் பெருந்துணைவர், எண் பேராயம், எண் மயம் (பிறப்பு, குலம், கல்வி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு இவற்றால் வரும் எண்வகைச் செருக்கு எண் வகைக் கணம், எண்வகைக் கணிதம், எண்வகைக் காட்சி, எண்வகைத் துணைவர், எண்வகை மணம், எண்வகை மாலை, எண் வகையெச்சம் (உடற்குற்றம்) எண்வகை விடை - முதலியன.

வடமொழி வழக்கு : அஷ்ட கணிதம், அஷ்டகந்தம், அஷ்ட கருமம், அஷ்டகிரி, அஷ்ட கீடம், அஷ்டகுஷ்டம், அஷ்டகுணம், அஷ்ட குருக்கள், அஷ்ட குன்மம், அஷ்ட சிரார்த்தம், அஷ்ட சக்தி, அஷ்ட சித்தி, அஷ்ட மங்கலம், அஷ்ட தயாவிர்த்தி, அஷ்ட தர்மம், அஷ்ட தனம், அஷ்ட தாது, அஷ்ட தான பரிஷை, அஷ்ட திக்கு, அஷ்ட திக்கயம், அஷ்டதிக் கரணி, அஷ்ட திக்கு பாலகர், அஷ்ட நாகம், அஷ்ட நாக பந்தம், அஷ்ட நிக்கிரகம், அஷ்ட பந்தனம், அஷ்ட பரிஸம், அஷ்ட புஷ்பம், அஷ்ட போகம், அஷ்ட பிரமாணம், அஷ்ட பிரகரணம், அஷ்ட மணம், அஷ்ட மதம், எண் வகைச் செருக்கு, அஷ்ட மாந்தம், அஷ்ட மூர்த்தம், அஷ்ட மூர்த்திகள், அஷ்ட மூலம், அஷ்டலகஷ்மி, அஷ்ட லக்ஷணம், அஷ்ட லோக பஸ்பம்,