பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

230


பண்புடை மக்கள் எல்லார்க்கும் பயன்படுமாறு இயங்கத்தக்க குண நலன்களும் செயல்களும் உடைய மக்கள்.

- இது, பிறவுயிர்களுக்கு மனவளர்ச்சியில் உருவாகி நில்லாது மக்கட்கே அமைவதாகலின், மக்கட் பண்பு என்றும், அஃது அறிவின் மிக்கது 997) என்றும் பிறிதோரிடத்தில் விதந்து கூறினார்.

- இப் பண்புள்ளவர் பிறர்க்கு மனத்தாலும் செயலாலும் தீங்கு நினையார்.

5.பெறின்: உலகிற்கு வழங்கப் பெறுவார்களாயின்: ஈனுவார்கள் ஆயின்; உயிர்த்துக் கொடுப்பார்களாயின்,

- பழி பிறங்காப் பண்புடைய மக்களைப் பெற்றால், அவர் செய்யும் நல்வினைகளால், 'தந்தை தாயர் செய்த தீவினை தேயும்' என்று பரிமேலழகர் கருமப் பொருள் கூறுவது, உலகியலானும், அறிவியலானும், மெய்யறிவியலானும், சிறிதும் பொருந்தாப் பொய்ப் புளுகே! இது பார்ப்பனியத்திற்கே இயல்பானது என்க.

- இதனையே பாவாணரும் வழிமொழிந்து, "பிள்ளைகள் செய்யும் நல்வினையாற் பெற்றோர்கள் தீவினை தேயும் என்னும் கருத்துப் பற்றி, எழு பிறப்பும் தீயவை தீண்டா என்றார்” - என்று பாரித்துரைப்பது அறிவியலறியாமையை உணர்த்திற்று.

6. இவை இரண்டு பாடல்களானும், அறவறிவுணர்வுள்ள மக்களாலும், பண்புடை மக்களாலும், பெற்றோரும் பிறரும் அடையும் . பெறும் பயனும், அதனால் சிறப்புறும் மக்கட் பெறுதலும் கூறப்பெற்றன.

O
5.தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
63

பொருள் கோள் முறை :

தம் மக்கள் தம் பொருள்; அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் என்ப.