பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

236


3. அமிழ்தினும் ஆற்ற இனிதே பாற்சோற்றினும் மிகுந்த சுவையுடையது: தாய்ப்பாலைச் சிறப்பாகவும் , பிற உண் பாலைப் பொதுவாகவும், பாற்சோற்றைப்பொருந்தும் இடங்களிலும் குறிக்கும் தமிழ்ச் சொல். 'அமிர்தம் என்று பரிதியாரும், அமரர் கடைந்தெடுத்த அமிர்தம் என்று காலிங்கரும் கூறுதல், கடைந்தெடுத்த பொய்யாம். பாவாணரும் தேவையின்றித் தேவருணவு என்று பொருள் கூறி, தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது என்று விளக்கம் தருவதும் தேவையற்றது.

- ஆற்ற மிகுதியும்.

- இனிது - இனிமை பயப்பது. சுவையும் நன்மையும் கருதி இனிது என்றார். இனிது நுகர்ச்சி இன்பத்தையும் செயல் நன்மையையும் குறிக்கும் பொதுச்சொல். குழலினிது, யாழினிது என்று முன்னர் வந்ததும், அறிவினிது (68 என்று பின்னர் வருவதும், நோக்கு இனிது (93), சாதலினிது (23), சொல்லினிது (648), கேண்மை இனிது 81) (839), உணர்வினிது (106), முயக்கினிது (108), காமம் இனிது (145, (196), (120), (1202), கனவினிது (1215), நீரினிது, புலவியினிது (1309, ஊடலினிது (1825 - என்றவாறு பலவிடங்களில் வருவதும் உணர்க.

3. இங்கு குழவியின் ஊறின்பத்தையும், நாவின்பத்தையும் கூறினார்.

4. குழவி பெற்றோர் மடியமர்தலும், பருவுணவருந்தலும் ஆகிய நிலை

கூறியதால், முன் பாடலை அடுத்து வைக்கப் பெற்றது.

O

௧௯

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

66

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை: தங்கள் குழந்தைகளின் உடலைத் தீண்டித் தடவித் தழுவுவது, பெற்றோர்க்கு உடலின்பம் தருவது; மற்று, அவர்கள் கூறும் (கள்ளம் கவடற்ற சொற்களைக் கேட்டது, அவர்களின் செவிக்கு இன்பம் தருவது.

சில விளக்கக் குறிப்புகள்: - 1. இக்குறள், பரிமேலழகர் முதலியர் வைப்பு முறையில் 65 ஆவதாகும். குழந்தைகளின் உடல் தழுவும்படி, சேய்மையினின்றும் நெருங்கி