பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7


வருதலைக் குறிப்புணர்த்தி, அவர்கள் நடைகொண்டதையும் உய்த்துணர்த்தலால், அமர்தல் நிலை கூறிய முன்னதன் பின்னர் இது வைக்கப் பெற்றது. மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்: தம் மக்களின் உடலைத் தீண்டித் தடவித் தழுவுவது பெற்றோரின் உடலுக்கு இன்பமாகும்.

இங்கு முன் பாடல்களிற் போல, தம் மக்கள் என்னாது, பொதுப் படக் கூறினாரேனும், அதிகார அடைவினால், பெற்றோர்தம் பிள்ளைகளையே, சிறப்பாகக் குறித்தது. எனினும், பிறர் மக்கள் என்று பொதுவாகக் குறித்துப் பொருள் கொள்ளினும் குறைவின்று என்று.

- மெய் தீண்டுதல்: தீண்டுதல் விரலால் தொடுதல் என்று பொருள் படினும், தடவுதலும், தழுவுதலும் அடுத்தடுத்து நிகழ்வன வாகலின் அவற்றையும் உள்ளடக்கியே கூறினார் என்க. - உடற்கின்பம் என்றலால், காணலும், கேட்டலும், தொடலும் எனும் வகை இன்பவுணர்வுகளையும் அடக்கிக் கூறினார்.

மற்று : இரு கருத்து இணைச் சொல். அவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு:

குழந்தைகளின் கள்ளம் கவடற்ற சொற்களைக் கேட்டது பெற்றோரின் செவிக்கு இன்பம் பயப்பதாகும். -

-அவர் சொற்கேட்டல் - என்பதற்கு மக்களது மழலைச் சொல்லே அன்றி, அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லும் சொல்லும் இன்பமாகலின், பொதுப் படச் சொல் என்றார், என்று விளக்குவர், பரிமேலழகர். - மழலை வேறு; சொல் வேறு. இனி, கற்றறிவுடைச் சொற்களும் வேறு!

மழலையை முன்னர்க் குறித்தார் ஈண்டு, கற்றறிவுடைமை தோன்றா நிலை என்பது, மெய்திண்டல் மெய்ப்பாட்டால் பெறப்பட்டது. எனவே, மழலை நிலைக்கும், கற்றறிவுச் சொல்நிலைக்கும், இடைப்பட்ட இளந்தையர் கூறும் கள்ளம் கவடற்ற சொல் நில்ை கூறப்பெற்றது என்க. எனவே, அவர் கருதுதல் மிகையாம். மேலும், கற்றறிவுடையார் சொற்கேட்டல் அனைவர்க்கும் இன்பமென்றாகலின் பரிமேலழகளின் மிகை மிகைப்பட்டது என்க.

- செவி கேட்டல் பொறி முழுமையும் உள்ளடக்கிக் கூறும் சொல்.

காது புறத்துறுப்பு மட்டும் உணர்த்துவது.