பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

அ - 2 - 3 மக்கட்பேறு - 7



தன் வயிற்றினின்று வெளியே தள்ளியவள் என்னும் பொருள் தரும் முந்துதமிழ்ச் சொல்லாகிப் பின், அதன் திசைமொழியாகிய தெலுங்கிற் சென்று தள்ளி என வழங்கும்.

-ஈன்றல் என்பதற்கும் வெறும் பெறுதல் என்னும் பொருள் குறிப்பது போதாது; அது தமிழின் தனிச்சிறப்பைக் குறைத்ததாகும். 

- பெரிதுவக்கும் என்றது, முன் கருவுயிர்த்து, அயர்வுற்ற அப்பொழுதில், பிறர் வாய் மகன் எனக் கேட்டு மகிழ்ந்ததினும் பேரளவாய் உள்ளக் களிப்பு எய்தியதைக் குறிக்கும்.

- மகிழ்ச்சி - புறத்துத் தெரியும்படி கொள்ளும் உடற்களிப்பு.

- உவகை - அகத்தேயே அமைந்து பொங்குகின்ற மனக்களிப்பு.

தன் மகனை மகன் என்றாலே, தன் மகன் என்று பொருள் பெறுமெனினும், தன் என்று விதந்து கூறியது, தான் வருந்திப் பெற்றெடுத்த அன்றைய பொழுதையும் நினைவு கூர்ந்ததை உணர்த்தி, ஈன்ற பொழுதின் எனும் சொற்களுக்கு வலிவூட்டி நின்றது. - இது தந்தையினும் மிக்குரிமையையும் உணர்த்தியது. - மகனை என்று ஆண்பால் குறித்துக் கூறியது, ஒருவன் எக்காலத்தும் இன்னார் மகன் எனலும், பெண்பாலை மணத்தின் பின் இன்னான் மனைவி எனலும் உலகியல் ஆகலின்,

.சான்றோன் எனக் கேட்ட தாய்: தன் மகனைச் சான்றோன் என்று

அறிஞர் பிறர் சொல்லி, அதனைச் செவிமடுத்த தாய். - சான்றோன் - அனைவர்க்கும் சான்று ஆகிநிற்பவன். பிறர் பின்பற்றத் தக்க நிலையில், அன்பானும், அறிவானும், பண்பானும் நிறைவுற்று இருப்பவன். - - சால் - சால்பு - சான்பு - சான்று சான்றோன் - நிறைவுறுதல்

- சால்பன் சான்றன் - சான்றோன் நிறைவுற்ற குணநலன்களுக்கு

எடுத்துக்காட்டாக இருப்பவன். -ஆங்கிலத்தில் இதற்கு நேர்ச்சொல், exemplay-exemplar. - எனக் கேட்ட தாய் - சான்றோராலும் பிறராலும் சொல்லக் கேட்ட தாய், - கேட்ட என்றது, தன் பாசமும் நேசமும் கொண்டி தாய்மை உணர்வால், அவனது அறிவை மிகுத்துணர்தல் இயல்பாதலின் தன் மதிப்பீடு அடக்கிச் சான்றோர் பிறரின் மதிப்பீடு கொள்ள விரும்பிக்