பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7




அ-2 இல்லறவியல்
அ-2-4 அன்புடைமை - 8
அதிகார முன்னுரை:

அன்புடைமையாவது, இவ்வுலகத் துயிர்கள் அனைத்தும் இணைந்தும் பிணைந்தும் இன்பம் பெற, உயிரின் கண் ஊடுருவி நிற்கும் ஒர் இயற்கை உணர்வை உடைய தன்மை என்க. அது மலரின்கண் மணம் போலவும், கனியின்கண் சுவைபோலவும் உயிரில் கலந்து உடல்வழிச் செயல்படுகிறது. மற்றோர் உயிரின் நுண்ணுணர்வுக்கு அது விளங்கக் கூடியது.

உயிர்கள் அனைத்துள்ளும் மாந்தவுயிர்களே படிநிலையால் சிறந்தும் உயர்ந்தும் நிற்றல் போல், அவற்றின் பல்வேறு உணர்வு நிலைகளும் அனைத்தினும் மேம்பட்டு விளங்கி நிற்கின்றன. அத்தகு உயிரியக்க உயிர்நிலைப்பாட்டு இயற்கை உணர்வுகளுள், அன்பு என்னும் உணர்வே முதலுணர்வும் முற்றுணர்வுமாகும். இதனை அடியொட்டியே பிறவுணர்வு நிலைகள் அனைத்தும் படிப்படியே வளர்ந்து நின்று, மலர்ச்சியும் கனிவும் எய்துகிறது.

இவ்வன்புணர்வு தொடக்கத்து நேரெதிர், இருபால் உடலினக்க உணர்வாகவும், பிறகு உள இணக்க உணர்வாகவும், அதன்பின் அறிவிணக்க உணர்வாகவும் பெருகி வளர்கிறது. அந்நிலைகளில் அஃது, உடல்வழி அன்பாகவும், உளத்துவழி அன்பாகவும், அறிவுவழி அன்பாகவும் செயல்படுகிறது. தேவையானவிடத்து அவை விளக்கப் பெறும்.

அன்பின் முதிர்வு இன்பம். அஃது உள்ளத்தை அளவி, அறிவை, அளாவி, உடலை அளாவி, உயிரை மலர்ச்சியுறச் செய்கிறது. உறுதோறும்