பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247

அ - 2 - 4 அன்புடைமை - 8


பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.

o
எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 71

பொருள் கோள் முறை:

அன்பின் வழியது உயிர்நிலை; :::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த:

பொழிப்புரை  : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 7 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும்.

அன்பின் வழியது உயிர்நிலை அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து.

- உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர்.

நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும்,

உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன,
மடந்தையொடு எம்மிடை நட்பு (22)

என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர்.

இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து