பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

250


பொருந்தாவென்க. அவ்வாறு கூறினும், அவை உலகியலறிவையே உணர்த்தும்.

-இனி, உலகியலில், ஒர் உயிர், இன்னொரு தொடர்புடைய உயிரை ஆருயிர் எனல் பொருந்தும். ஏனெனில், இங்குத் தோன்றிய ஓர் உயிர், இன்னோர் உயிர்த் தொடர்பை, அன்பு, காதல், நட்பு, உறவு அடிப்படையில் விரும்பி, அதனை ஆருயிர் என்றல், அதற்கு அருமையும், பெருமையும் வைத்துப் பேசுவதாகும். எனவே அங்கு இப்பொருள்கள் பிழைபடா வென்க.

-என்போடு இயைந்த தொடர்பு: என்பை அடிப்படையாகக் கொண்டு, தசையும், நாரும், நரம்பும், அரத்தமும் பொதிந்த உடலோடு பொருந்திய பிறவித் தொடர்பு,

-உயிர் உடலோடு பொருந்திப் பிறவிக்கு வருவது, அன்பைச் சுவைத்த வழக்கத்தினால் ஆகும் என்கிறார்.

- உயிர் உடலை விட்டுப் பிரிந்து தனித்து நின்று இயங்கும் பொழுது, மீண்டும் அந்த அன்புச் சுவைப்பை நினைவு கொண்டு, விரும்பி, உடலொடு வந்து பொருந்திப் பிறவி யெடுக்கிறது என்பது நூலாசிரியர்

- உடம்பை என்பு என்று மட்டும் குறித்தது, எலும்பு அதன் இயக்கத்திற்கு அடிப்படையாதல் பற்றி.

-உடம்பின் மிடைந்த பொருள்களுள் என்பு இல்லையாயின், அதுவெறும் தசைக்குவியலாகி, வடிவமே இல்லாமற் போய்விடும் என்பதால், அதன் முகாமை பற்றியும், உடலின்கண் உள்ள தசை, நார், குருதி, தோல் முடி முதலிய அனைத்துப் பொருள்களும், மண், நீர், தீ யாவற்றாலும் அழிந்து போக, என்பு (எலும்பு ஒன்றே நீண்ட நெடுங்காலம் ஆனாலும் அழியாமல் உள்ளது பற்றியும் அதையே உடலெனச் சிறப்பித்தார் என்க.

-அது போலவே, ஆருயிர் இயக்கத்திற்கும் அன்பு அடிப்படையாகிறது என்றார்.

உயிர் அன்பைச் சுவைத்த வழக்கத்தால், மீண்டு மீண்டும் அவ்வப் பொழுது ஏதாவது ஓர் உடலுடன் தொடர்புகொண்டு பிறவிக்கு வந்து அன்பைச் சுவைக்கிறது. இல்லெனில், அஃது ஒர் ஒளியாற்றலாகி என்றும் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் என்பது மெய்ந்நூலாசிரியர் கருத்து என்பார்.

4. ஆர் உயிர் அன்போடு பொருந்திய நிலையை வழக்கு (வழக்கம்) என்றும், உடலொடு பொருந்திய நிலையைத் தொடர்பு என்றும் குறித்தது, உயிர்க்கு பிறவியில்லாத பொழுதும் அன்பு நாட்டம் உள்ளது.