பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

அ - 2 - 4 - அன்புடைமை - 8


பற்றியும், அதைச் சுவைக்கப் பிறவியெடுப்பது அவ்வப் பொழுது, கிடைக்கின்ற ஏதாம் ஒர் உடம்பு கொண்டும் ஆகையால், அதனோடு கொள்வது அறிமுகமில்லாத புதுத் தொடர்பு என்பது பற்றியும் என்க. - நிலையான ஈடுபாட்டை வழக்கு என்றும், அவ்வப்பொழுது வேறுவேறு உடம்பொடு கொள்ளும் ஈடுபாட்டைத் தொடர்பு என்றும் குறித்தார் என்க.

5. சென்ற பாடலில் அன்பின் வழியது உயிர்நிலை என்றதை உலகியலால் மேலும் நுட்பமாக விளக்கியதால் அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது.

6. மெய்ப்பொருள் சான்ற இக்கருத்து இல்லறவியலில் வைக்கப்பெற்றது, ஆருயிர் முன் பிறவிகள் பலவற்றுள்ளும் கொண்ட அன்புத் தொடர்பின் அடிப்படையில்தான், இல்லறத்தின் தாய்மைக் கூறுகள், துணைக் கூறுகள், மக்கள் கூறுகள் முதலியன அமைகின்றன என்பது பற்றி என்க.

0
எங் புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை.
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
73

பொருள் கோள் முறை :

அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு,
யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும்.

பொழிப்புரை மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்துள்ள ஐம்பொறிகளும், செயற்கருவிகளும் ஆகிய உறுப்புகளெல்லாம் செப்பமாகவும், அழகியனவாகவும் அமைந்திருந்தாலும், அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? (ஒரு பயனையும் செய்துவிட முடியாது.

1. பரிமேலழகர் முறைவைப்பில் 79ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, இங்கு 73ஆவது குறளாக கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது.