பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

252


2.அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு உயிர், உடல் இயக்கத்தில், மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு, -

- அஃதாவது, உயிருக்கும் உடலுக்கும் இணைப்பிடமாகிய மனத்தின்கண், அதற்கிருக்க வேண்டிய ஒரே உறுப்பாகிய அன்பு உணர்வு தேவை என்று வலியுறுத்தினார் என்க. மனத்துக்கண் மாசில்லாமையை முன்னரும் (34) ஆசிரியர் கூறியுள்ளதை ஒர்க,

- அகத்து உறுப்பு அன்பு என்பதற்குப் பரிமேலழகரும், பாவாணர் முதலியோரும், இல்லறத்தின் உறுப்பு ஆகிய அன்பு என்று இயல் வழியாகப் பொருள் கொண்டனர். அது பொருந்தாதென்க - எந்தக் கருத்தையும் நூலாசிரியர், அதிகாரத்திற்குச் சிறப்பாகவும், உலகியலுக்குப் பொதுவாகவுமே கூறிச் செல்வது, அவர்க்கு இயல்பாக உள்ளதை உரையாசிரியர்கள் முதலில் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அவ்வகையில், இல்லறத்தில் ஈடுபடாதவர்க்கு இக் கருத்து, பயனில்லாமற் போமாறும், உயிருடல் இயக்கத்திற்கே சிறப்பாக விளக்கந் தரும் இக் குறளின் கருத்தை அனைவரும் உணராமற் செய்யுமாறும், பரிமேலழகரும் பாவாணரும் பிறரும் அவ்வாறு பொருள் கண்டது மெய்ப்பொருள் ஆகாதென்க.

- இனி, ஒரு சிலர், உடலின் புறத்துறுப்பு கூறப்பெறுவதால், அதற்கு இணைவாக அகத்துறுப்பு என்பதற்கு உடலின் உள்ளுறுப்பாகிய அன்பு என்று பொருள் கண்டதும் நிறைபொருளாகாது. என்னை? அன்பு என்பது, உடலின் நெஞ்சாங்குலை, ஈரல், குடல் முதலியன போல் உள்ளுறுப் பன்று: அஃது மனத்தின் ஒரே சிறப்பு உறுப்பு என்க. இன்னும் கூறுவதானால் உயிரின் உறுப்பே அதுதான். அதனால்தான், முன்னை, அன்பின் வழியது உயிர்நிலை என்றும், 'அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு என்றும் விதந்து கூறினார் என்க.

2.யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும்: - யாக்கை - உடம்பு எலும்பு, தசை நார், நரம்பு - முதலியன கொண்டு கட்டப்பெற்றது. ஆகையால், உடம்பை யாக்கை என்றனர்.

யாத்தல் - கட்டுதல்.

- புறத்து றுப்பு எல்லாம்: உடம்பின் புறத்தே உள்ள உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐம்பொறிகளும், கை, கால், விரல்கள், தலை முதலிய செயற்பொறிகளும் என்க.

- இவை, இயக்கத்திற்குரிய வகையில் மெய்யாகவும், அழகாகவும்