பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

258


இவர்வழிப் பாவாணரும், இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இனபம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை என்று பொருள் கூறி, இம்மையில் இவ்வுலக இன்பமும், மறுமையில் விண்ணுலக இன்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது என்று விளக்கமும் செய்து, பரிமேலழகரையே வழிப் பற்றுவர். இருவர் கருத்தும், இன்னோரன்ன பிறர் கருத்தும், வாழ்வியலுக்கும், அறிவியலுக்கும், மெய்யறிவியலுக்கும் பொருந்தாவென்று புறக்கணிக்க -

'ஆருயிர் என்புற்றார் எய்தும் பிறப்பு' என்னும் நச்சர் பாடம் சிறப்பன்று.

2. அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப: ஏற்கனவே மற்றவர்களிடம் அவர்கள் அன்பு கொடுத்தும், கொண்டும் அமைந்திருந்த நடைமுறையால் வழக்கத்தால்

- நிகழ்வன என்று அதன் உலகியல் உணர்ந்தவர் கூறுவர்.

- அன்புறுதல் - அன்பு செய்தல், அன்பு செயப்பெறுதல்.

- அமர்ந்த அமைந்திருந்த - வழக்கு நடைமுறை, வழக்கம்.

- ஏற்கனவே அவர்கள் அன்புவழி வாழ்க்கையினை மேற்கொண்டிருந்ததன் பயன் என்றார்.

3. இது, அன்புணர்வு கொண்டு வாழ்தலால் ஏற்படும் உலகியல் பயனையும், உயிரியல் பயனையும் எடுத்துக் கூறியது.

o
எசு அன்பினும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு
76

பொருள் கோள் முறை

அன்பு ஆர்வம் உடைமை ஈனும், அது
நண்பு எனும் நாடாச் சிறப்பு ஈனும்.

பொழிப்புரை உள்ளத்தில் உள்ள அன்புணர்வுதான், பிறரிடம் தொடர்பு - கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்கும். அந்த ஆர்வந்தான் பெறுதற்கரிய நட்பு என்னும் சிறப்பு உறவைப் பெற்றுத் தரும்.