பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263

அ - 2 - 4 - அன்புடைமை - 8



'தொல்கவின் வாடிய தோள்' (1234)
'கண்ணும். என்னைத் தின்னும்' (1244)
'பிரிந்தவர் பின் செல்வாய் நெஞ்சு' (1146)
'பணிமொழி... பெண்மை உடைக்கும்' (1258)

ஆகிய இடங்களில் எல்லாம் ஆசிரியர் கையாண்ட உத்தி போன்றதே அன்பிலதனை அறம் காயும் என்றதும்.

இதனை மட்டும் இங்கு மட்டும் பரிமேலழகரும் அவர் சார்ந்த வேதமதக் கொள்கையை ஒப்பிய உரையாசிரியர் பலரும், அன்பிலாத உயிரை அறக் கடவுள் காயும் என்றது, அவர் வேத மதத்திற்கு வலிமை கூட்டவே என்க. ஒவ்வொரு பண்பிற்கும் பயனுக்கும் தெய்வங்கள் கற்பிப்பது ஆரியவியல் என்க.

- இனி, பாவாணரும் அறத்தெய்வம் என்றதும் பரிமேலழகரை அடியொட்டியே என்க.

- இனி, அன்பில்லாதவர்கள் இயல்பாகவே ஒரு வகைக் குறையுணர்வுடையவர்களாகவே உள்ளதால், எதிலும் அவர்கள் நிறைவையும், இன்பத்தையும் காண மாட்டாதவர்களாகவே இருப்பர். அவர் நம்பிக்கையுணர்வற்ற, தோல்வி மனவுணர்வு கொண்ட, துன்பியல் உணர்வுடைய வெறுக்கை (விரக்தியாளர் (Pessimist)களாகவே இருப்பதால், எப்பொழுதும் துன்பவுணர்வே கொண்டிருப்பர். எல்லாக் கருத்துகளும் எதிர்க் கருத்துகளாகவே அவர்களுக்குத் தோன்றும். இஃது அவர்களுக்கிருக்கும்

அன்பில்லாதவர்களுக்குத் துணையிருக்காது; எனவே அவர்களுக்கு ஆள்வலிவிருக்காது (862, அன்பிலார் எந்த அரசியல் பணிகளுக்கும் அமர்த்தப்பெறார் (513), (68), (632). எனவே அவர்களுக்கு அதிகார வலிவும் இராது. இனி, அன்பில்லாதவர்கள். கோழைகளாகவே இருப்பதால், அவர்களால் துணிவான எந்தச் செயலையும் செய்ய இயலாது (7): அன்பில்லாதவர்கள் சூழ்ச்சியாலும், ஏமாற்றாலும், தந்திரத்தாலும் ஈட்டிய பொருளைப் பிறர் பறித்துக் கொள்வார்கள். (1009)

- இவையெல்லாம் அவர்களுக்கு வரும் (புறத்தாக்கங்கள்)

இவ்வகையில், அன்பிலாதவர்கள் படும்துன்பங்களைத்தாம் ஆம் காயும், துன்புறுத்தும் என்றார். மேலும், அன்பில்லாதவர்களை மற்றைய பொதுவுணர்வாளர்கள் மதியாததும், அவர்களுக்குத் துணை தில்லாததும் அறக்கொடுமை என்க.

மற்றபடி, அறக்கடவுள், அறத்தெய்வம்,தர்மதேவதை என்பவெல்லாம்