பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

264


ஆரிய வியலின் மக்களை அச்சுறுத்தச் செய்யும் கற்பனையே என்க.

அவர்கள் அறக்கடவுளாகிய தர்மதேவதையை இவ்வாறு வண்ணிக்கின்றனர்.

அஃதாவது, தர்மதேவதை என்பது பிரம்மாவின் வலது மார்பில் பிறந்தது. பொன் ஊழி என்னும் முதல் ஊழியில் (யுகத்தில் நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றியிருந்தது. வெள்ளி ஊழி எண்று கூறப் பெறும் இரண்டாவது ஊழியில் மூன்று கால்களுடனும், பித்தனை ஊழி எனப்பெறும் மூன்றாவது ஊழியில் இரண்டு கால்களுடனும், இரும்பு ஊழி எனப்பெறும் நான்காவது ஊழியில் ஒரு காலுடனும் நடக்கும் என்றும் ஆரியத் தொன்மங்களுள் (புராணங்களுள்) சொல்லப் பெற்றுள்ளது.

(The goddes of virtue born from the right breast of Brahma. The goddess is described as placing four feet on the earth in the golden age; three in the next or silverage; two in the brazen; and only one in the iron age - Winslow's Tamil and English Dictionary) .

இனி, இது வெள்ளை நிறமும், நான்கு கொம்புகளும் உயர்ந்த திமிலும் நிலத்தில் படியும் வாலும் உள்ள எருதாகவும், இது திருமாலின் மார்பில் பிறந்ததாகவும், சிவனுக்கு இஃது ஊர்தியாகவும் சில நூல்களில் வண்ணிக்கப்பெறுகிறது.

இவற்றிலிருந்தே இப் புராணிகர்தம் புளுகினை அறியலாம்.

மேலும், பரிமேலழகர்களுக்குத் திருக்குறள் முழுவதும் ஆரியவியலின்படி வகுக்கப்பெற்ற அறநூல் என்று ஆங்காங்கே, வாய்ப்பு கிடைத்த விடங்களிலெல்லாம் இட்டுக் கட்டிக் கூறுவது வழக்கம் என்க.

4. இதில் அன்பிலார்க்குற்ற தீமைகளும் துன்பங்களும் சுட்டப் பெற்றன என்க.

எஅ. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணி பூசல் தரும். 78

பொருள் கோள் முறை :

அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ;
ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்.

பொழிப்புரை: வெறுப்பு விருப்புகள், பொறாமை பொருமல்கள், ஆசை அங்காப்புகள், இழிவு ஏக்கங்கள், காரண கமுக்கங்கள் முதலிய உணர்வுகளைப் பிறர்க்குத் தெரியாமல் உள்ளத்தில் மறைத்து வைப்பதைப்-