பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

265

அ - 2 - 4 - அன்புடைமை - 8

போல் அன்புணர்வுக்கும் மற்றவர் அறியாதபடி அடைத்துத் தடுக்கும் ஒரு தாழ்ப்பாள் உண்டோ? இல்லை. அன்பார்வம் உள்ளவர்கள் பிறர் துயர்க்காக வருந்துகையில், அவர்கள் கண்களிலிருந்து வழியும் எளிய கண்ணீரே அவரன்பை மற்றவர்க்குப் புலப்படுத்திவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்:

அன்பிற்கும் என்றதால், பிற மன உணர்வுகளைப் பிறர் அறியா வண்ணம், மனம் மறைத்து வைப்பதைப் புலப்படுத்தினார்.

அவ்வுணர்வுகளில் சில குறிக்கப் பெற்றன.

- அன்பில்லார் அன்புள்ளார் போல், உரை, செயல் முதலியவற்றால் கரவின் ஒழுகலாம். ஆனால், அன்புள்ளவர், அன்பில்லார் போல், அதனை அடக்கி நிற்றல் இயலாது என்றார். அவ்வாறு செய்யின் அவர் கண்களில் பூத்து வரும் புல்லிய நீரே அதைப் புலப்படுத்தி விடும் என்றார்.

- அடைக்கும் தாழ் தாழ்ப்பாளிட்டு அடைக்கும் கதவு.

1251 - ஆம் குறளிலும், நிறை காத்தலுக்கு நாணத்தைத் தாழாகக் கொண்டு அடைக்கும் கதவை உவமை கூறினார்.

-இப் பயன்படுத்தத்தையும் விரிவான விளக்கத்தையும், உரனென்னும் தோட்டியான் என்னும் 24 ஆம் குறளுரையில் காண்க

2. ஆர்வலர்: அன்பு செய்யும் ஆர்வம் உடையவர். முன்னும் (76)'அன்பினும் ஆர்வம்' என்றார்.

3. புன் கணீ : புன் கண் நீர் - புல்லிய - எளிய கண்ணீர், பிறர் துயர்க்கு வருந்துபவர் கண்களிலிருந்து வழியும் எளிய கண்ணீர் - எளிமை தோன்ற 'புன் கண் நீர்' என்றார்.

இதைப் 'பொழிகின்ற புல்லிய கண்ணீர்' என்று பரிமேலழகர் பொருளுரைத்தது பொருந்தாது; பொழிதல், அளவிற் பெரிதாகக் கொட்டுதல் ஆகையால். பொழிதல் மழை, அருவி, தொடர்ந்த பேரழுகை - இவைக்கே பொருந்ததும் என்க.

பாவாணரும் 'கண் சிந்தும் நீர்' என்றதும் பொருந்தாது. சிந்துதல் - வலிதின் வெளிப்படுத்தல். 'காரம் பொறது கண்ணீர் சிந்துதல்', 'மூக்கைச் சிந்துதல்' - முதலியவற்றுக்கே பொருந்தும் என்க.