பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

15 


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திர்னார் 15

தொல்காப்பிய மரபியலில் நூல்மரபு பற்றிய நூற்பாக்களிலும் நூலுக்குப் பாயிரம் கூறுவது மரபு என்பது கூறப்பெறவில்லை.

அவ்வாறிருப்பினும், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரமாகப் பனம்பாரனார் என்பவர் செய்த பாயிரம் ஒன்று காணப்பெறுகிறது. எனவே, இதுபற்றிய வரலாறு மயக்கமளிப்பதாக உள்ளது.

எஃது எவ்வாறிருப்பினும், நூலுக்குப் பாயிரம் பாடுவது ஒரு மரபாக உள்ளது. பிற்கால நூல்களால் தெரியவருகிறது.

இவ்வகையில் திருக்குறளுக்கு அமைந்துள்ள பாயிரமும் ஐயுறவுக் கிடமளிப்பதாகவே உள்ளது கருதத்தக்கது.

மேலும், நன்னூலில் கூறப்பெறும் இலக்கண முறைப்படி பாயிரம் என்பது, பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

பாயிரம், பொதுச் சிறப்பு எனவிரு பாற்றே

- - நன்2 இதன்படியும் திருக்குறளில் உள்ள பாயிரம் பொதுப்பாயிர்மா, சிறப்புப் பாயிரமா என்றும் மதிப்பிட்டுக் கூறுவதற்கியலாமல் உள்ளது அறியத்தக்கது. -

இனி, நன்னூலில் பாயிரம் கூறப்பெறுவதற்கு உரியோராகக் கூறப் பெறுவோர், .

'தன்ஆ சிரியன் தன்னொடு கற்றோன் தன்மா னாக்கன் தகும்உரை காரன் என்று) இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே

- - நன்:51 என்று கூறப் புெற்றிருப்பதற்கேற்ப, திருக்குறள் பாயிரம் மேற்கூறிய எவராலும் கூறப் பெறாமல், ஆசிரியர் பெயராலேயே கூறப் பெற்றதாக அமைந்திருப்பதும் அவ்வையுறவுக்கு அரண் சேர்ப்பதே.

மேலும், நூலாசிரியரே பாயிரம் கூறுதல் தகாது என்றும், மேற்கூ றப்பெற்றவருள் ஒருவரே பாயிரம் செய்தல் வேண்டும் என்றும் கீழ்வரும் நூற்பாக்களுள் வலியுறுத்தப் பெறுகிறது. - :

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்

தான்தற் புகழ்தல் தகுதி யன்றே.