பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

276


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 276.

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்

3®: 142 9 // சமைத்து உண்பதே இயன்றவரை பிறரொடு பகிர்ந்து உண்பதற்குத்தான் என்று அவர்கள் கருதினர்.

நட்டார்க்கும் நள்ள தவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்'

(பாத்துண்டல் பகிர்ந்துண்டல் - நாலடி 94 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ (332)

என்றார் நூலாசிரியரும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறம்-18-19 என்றார் பிறரும்.

'வருவிருந்து ஒம்பி - (கலி: 8.2) செல்விருந்து ஆற்றி (அகம்: 208-1) மகிழ்வதையே, அவர்கள் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகக் கருதினர் என்றுரைப்பதில் குறையில்லை.

புதியராக வந்த விருந்தினர் ஒருவேளையன்று, ஒரு நாளன்று, கூடுதலாகச் சில நாள்களும்கூடத் தங்கியிருந்தனர். அப்பொழுதும் அவர்களை அவர்கள் விரும்பினர். -

'இல்லுறை நல்விருந்து அயர்தல்' அகம்: 300-21. ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம் பல நாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன்'

புறம் 101- 3. சிலர், அடிக்கடி நாள்தோறும் விருந்தினர் வரினும், அவ்வாறு வருந்திவரும் புதியவர்களை அவர்கள் மகிழ்வுடன் ஒம்பினர்.

'விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர் வருந்தி வருநர் ஒம்பி ‘. அகம்: 353, 17-18. விருத்தினர்க்கு இல்லுறை தலைவியர் சமையலறையில் மகிழ்வுடனும் பல்வகைச் சிறப்புடனும் விருந்துணா செய்ததைக் கழகப் பாடல்கள்

குறிப்பிடுகின்றன.