பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

278


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 278 நாள் தன்னிடமிருந்த, தான் பாடிப் பிழைத்து வந்த சிறிய யாழையும் பணையம் வைத்துப் புரந்ததையும் கீழ்வரும் பாடல் கூறுகிறது. 'நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைய பழவாள் வைத்தனன் இன்று, இக் கருங்கோட்டுச் சிறியாழ் பணையம்' புறம் 366.57 நெருநை நேற்று இரும்புடைப் பழவாள் இரும்பினாலான பழையவாள்; பனையம் - ஈடு (அடகு,

இல்லறவழுத்தத்தில் அயர்ச்சி தோன்றாதிருக்கவும், மகிழ்ச்சி ஊன்றவும், அக்கால் மக்கள் விருந்தினரை எதிர்கொண்டு ஒம்பினர். அதேபோல் பிறரது இல்லங்களுக்கும் விருந்தினராகச் சென்றனர். இவ்வாறு ஒருவர்க்கொருவரான

ஈடுபட்டால் இரு நிலையினர்க்கும் மகிழ்ச்சி விளைவது இயல்பாம் என்க.

விருந்தோம்புதலில், இல்லறத் துணைவியருக்கே மிகுதியும் பங்கும் பொறுப்பும் ஈடுபாடும் இருப்பதால், அவர்களே அப்பேரற உணர்வுக்கு மிக்கிடம் கொடுத்தனர். இவ்வகையில் இல்லறத் தலைவர்க்கு உதவியாக அக்கால மனைவியர் இயங்கியது, தமிழ்ப் பண்பாட்டிற்கே பெருமை சேர்ப்பது. மனையுறை மகளிர் இதற்கு இயைபாக இல்லாவிடில், விருந்தோம்பல் அறம் சிறப்புற நடவாது என்பதையும், அப்பண்பு இல்லறவியலில் ஒரு கூறு என்பதையும், அதற்கு அன்புடைமை மிகு தேவை என்பதையும், வலியுறுத்தவே இவ்வதிகாரம், இல்லறவியலிலும், அன்புடைமையின் பின்னும் வைக்கப்பெற்றது, என்க.

முற்காலத்துச் சிறந்திருந்த இவ்விருந்தோம்ப லென்னும் அருந்தொடர்புணர்வு, தமிழினத்து நேர்ந்த புறவினக் கலப்பாலும், புறப்பண்பாட்டுத் திரிபாலும், பிற்காலத்து வர வர, பிற நல்லுணர்வுகள் போலவே படிப்படியாகக் குறைவுற்றுச் சிறப்பிழந்தது. மீமிசைமாந்த வளர்ச்சியில், நல்லவை அருகியும், அல்லவை பெருகியும் வரும் இக்காலத்தோ, இந் நல்லுணர்வு அங்கொன்றும் இங்கொன்றுமான குடும்பங்களிலேயே குடிவாழ்ந்து கொண்டுள்ளது. - :- -

அன்பிலாப் பெண்டிர் விருந்தை ஏற்று, ஒம்பாவுணர்வுடன் முரண்பட்ட பிற்கால வாழ்வின் ஒரு துயர் நிகழ்வை, -

இருந்து முகந்திருத்தி ஈரொடுபேன் வாங்கி

பிருந்துவந்த தென்று விளம்ப- திருந்திமுகம் ஆடினான் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான் . தனியன்.

- என்னும், பிற்கால ஒளவையார் பாடல் சான்று குறித்தது.