பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9 அக. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு. 8t

பொருள் கோன் முறை:

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.

பொழிப்புரை இல்லறத்தில் மனைவி மக்களுடன் இருத்தலும், அவர்களையும் பிற ஈட்டுடைமைகளையும் பேணிக் காத்தலும், ஆளுதலும், வாழ்தலும் ஆகிய செயல்கள் எல்லாம், தமக்கு அறிமுகமில்லாப் புதியவர்கள் அல்லது பழகியவர்கள், தம் இல்லத்திற்கு வரும் பொழுது, அவர்களையும் விரும்பிப் பேணி உதவுதல் பொருட்டேயாம்.

சில விளக்கக் குறிப்புகள் :

f

2

இருந்து இல்லத்தில் மனைவி மக்களுடன் இருந்து. ஒம்புதல் - விரும்பிப் பேணுதல் - காத்தல் - ஒம்பு - உவ என்னும் வேரடியாகப் பிறந்த சொல். உவ - விரும்பு விரும்பிப் பேணு உவ - அம் - உவம் + பு - உவம்பு - ஒம்பு. 'அம் சிறப்புப் பின்னொட்டு; 'பு பெயரிறு.

வாழ்வது எல்லாம் - என்றதால், இருத்தலும், ஈட்டலும், காத்தலும், ஆள்தலும், வாழ்தலும் முதலிய அனைத்துச் செயல்களும் என்று பொருள் பெறலாயிற்று. விருந்து - விருந்தினர்; அறிமுகமில்லாத புதியவர்கள் அல்லது பழகியவர்கள் (முன்னுரை காண்க) -

- விருந்தோம்புதல் விரும்பிப் பேணுதல். வேளாண்மை - விரும்பிப் பேணுதல் - உதவுதல். வேள் - விருப்பம் வேள் + ஆண்மை - வேளாண்மை. விருப்பத்தை ஆளுதல் தன்மை.

பேணுதல், புரத்தல் அவர்க்கு உதவுதல், துணையிருத்தல் முதலிய வகையால் ஆளுதல் தன்மை. -

2) வேள் - மண்'