பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

286


உண்ணப் போவது நோய் நீக்கத்திற்கு மட்டுமன்று அந்நோயையும் நீங்கச் செய்து மேலும், நோய் வராமலும், உயிர் உடலினின்று பிரிந்து செல்லாமலும் காக்கும் அருமருந்தே ஆயினும்.

'மருந்தே எனினும் விருந்தோ டருந்து என்னும் பழமொழி கருதற் பாலது.

2. புறத்ததா - புறத்தது ஆக வீட்டிற்கு வெளியே உளதாக

3. வந்த விருந்தை வெளியே காக்க வைத்துத் தான் மட்டும் உயிரைக் காத்துக் கொள்ளும் மருந்தே எனினும் உண்ணுவது விரும்பத்தக்க பண்பாடன்று, வெறுக்கத்தக்க - தவிர்க்கத் தக்க நடைமுறை என்று, விருந்து பேணாமையைக் கடிந்தார் என்க

.

வருவிருந்து வைகலும் ஒம்புவான்
வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று 83

பொருள் கோள் முறை :

வைகலும் வருவிருந்து ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. -

பொழிப்புரை : நாள்தோறும் இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரைப் பேணுவானது வாழ்க்கை வறுமை வந்து இல்லாமைப்படுவது இல்லை.

1 வருவிருந்து-வருகின்ற விருந்து முக்காலத்தையும் உணர்த்தும் வினைத் தொகை .

2. வைகல் நாள்தோறும் வைகல் - வருதல், இருத்தல், கழிதல் - ஆகிய மூன்று வினைக்கும் பொதுவான சொல் ஆகையால் பொழுதைக் குறித்தது. பொழுது - நாள். -

- வைகலும் என்றது மதிப்புரை (உபசார வழக்கு நாள்தோறும் அவ்வாறு வருதல் நிகழாததால் என்க. -

3.பருவந்து - வறுமையுற்று பருவரல் - மிகுதியும் வரல் மங்கல வழக்காய்த் துன்பத்தையும் அதன் வழி வறுமையையும் குறித்தது. நல்கூர்தல்நன்காடு, நல்ல பாம்பு - போல்வதொரு சொல்.