பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

4. பாழ்படுதல் - இன்மைப் படுதல்.

5. விருந்து பேணுவான் அதன் பொருட்டு நலிந்து இல்லாமைப் படுதல் இல்லை என்பது உலகியலுக்கு மாறுபட்டது போல் தோன்றினும், குமுக மனவியல்படி, விருந்தாக வந்து பேணுவானது குணநலனும், செயல்நலனும் கருதியவர், அவன் நலிவுறும் போது நன்மை கருதுவார் என்க. அதனால் துன்பமுறுதல் இராது என்றார்.

Ꮾ. இது, விருந்தோம்பலால் பொருள் இழப்பு நேரும் என்று உலகியல்

கருதுவார்க்கு, குமுக மனவியல் கூறி, ஐயம் போக்கியது. {}

அச அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஒம்புவான் இல். 84

பொருள் கோள் முறை :

முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல், அகன் அமர்ந்து செய்யாள் உறையும்.

பொழிப்புரை : முகத்தில் மகிழ்ச்சி தங்க, நல்ல தகுதியுடைய விருந்தினரைப் பேணுவானது இல்லத்தில், மனம் இசைந்து செய்யவள் தங்கியிருக்கும்.

சில விளக்கக் குறிப்புகள்

1. அகன் அமர்தல் மனம் இசைதல் விரும்புதல். அகன் - அகம், ன் போலி அமர்தல் -பொருந்தல், இசைதல், விரும்புதல், மகிழ்தலுமாம்

2. செய்யாள் - செல்வத்திற்குத் தெய்வ உருவகம் ஆரியவியலின்

அடிப்படை சான்றது. - .

- செயலை முயற்சியை அடிப்படையாகக் கொண்டு அதனால்

விளையும் செல்வ நிலையைக் குறித்தது. முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என்றது காண்க -

3. உறையும் இருப்பிடமாகக் கொள்ளும்