பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

290


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 290 குளறுபடிகளைக் கூறுவது அறிவினார்க்கும் ஒப்புவதன்று. எனவே வித்தாமல் விளைவது என்னும் பொருள் பொருந்தாப் புளுகுரையே என்று கூறி விடுக்க இவ்வாறு அனைவர்க்குமே ஒவ்வாததும், இயற்கைக்கே மாறானதுமான ஒரு பொருளை, உரையாசிரியர் அனைவருமே ஒட்டு மொத்தமாக இணைந்து கூறியது எவ்வா றெனில், அஃதவரவர் நம்பிக்கையும் அறிவு வளர்வின் அடையாளமுமே யாகும் என்க. என்னை? கண்டானாம் தான் கண்டவாறு (849) என்றார் நூலாசிரியரும். மேலும், பரிமேலழகர் போலும் வேத மதவியல் நூலாசிரியர்க்கு வரன் என்பது மோட்ச உலகைக் குறித்திருக்க, (24, "மிடல் என்னும் சொல் காவல் வலியைக் குறிக்காமல் போனது பெருவியப்பே

- இனி, அவர்கள் உரையின் பொருத்தமின்மையைக் காட்டுவாம். வித்தும் இடல் வேண்டும் கொல்லோ என்று கொண்ட பரிமேலழகர் 'விதை விதைத்தலும் வேண்டுங் கொல். (வேண்டுவதில்லை) என்று பொருள் கூறி, விளை நிலம் தாமே விளையும் என்றார். ஆனால் 'அஃதெவ்வாறு என்றும், அஃது என்ன விளைவு என்றும் கூறவில்லை. விருந்து ஓம்பிய்வன் வேண்டும் பொழுது வேண்டிய விளைவு ஆமோ என்பதற்கும் இதில் விடை கூறுதல் இயலாது என்க

ஆனாலும், பரிமேலழகரின் இவ்வுரைக்கு மேலும் விளக்கம் கூறிய கோ.வடிவேலனார் (1904) என்பார், விருந்தினரை முன்னே யுண்பித்துப் பின்னேதானுண்ணுவானது விளை நிலத்தில் தெய்வம் தானே வித்திட்டு விளையச் செய்யும் என்பதாம் என்று கூறி, அதற்கு,

விச்சதின்றியே விளைவு செய்குவாய் வின்னும் மண்ணகம் முழுதும் யாவையும்’ -

. . - திருவாசகம் என்னும் செய்யுளையும் எடுத்துக் காட்டினார். "தானே விளையும் என்னும் பரிமேலழகர் கூற்றுக்கு இயற்கைப் . பொருத்தமின்மையைக் கண்டுகொண்டுதான், வடிவேலனார், அதற்கு மேலும் வலிவூட்டத் தெய்வம் தானே வித்திட்டு விளையச் செய்யும் என்று அக் கூற்றிற்குச் சப்பை வைத்துக் கட்டினார். - - - ... 3

அற்றஃதாயின் தெய்வம் வித்திட்டுத்தான் ഖിബ് செய்யுமோ? . வித்திடாமலே விளையச் செய்யும் ஆற்றல் அதற்கிலையோ? இனி, வித்திடுதலே செய்யுமாயின், நீரிடுதலும், எருவிடுதலும், காவலிடுதலும், களையெடுத்தலும் அத்தெய்வம் செய்யுமோ என்பது விளங்குமாறில்லை. மேலும் தெய்வங்கள் பலவற்றுள், விருத்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்தை