பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

292


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 292 நிகழ்த்துவதென்பது, தன்னலம் கருதுவதே என்க.

இனி, ஏதாம் சில மத நூல்களில் ஒன்றிரண்டாகக் கூறிய இறும்பூது எடுத்துக் காட்டுகளைக் கூறிப் பொது வறத்திற்கு வலிவூட்டுவது தகாது: இஃது மக்களை மதச்சேற்றில் புதைப்பது மாகும்.

அடுத்து, விருந்தினரை ஒம்புவானது நிலங்களைத் தேவர் விளைவிப்பர் என்பது கவைக்குதவாத குருட்டு நம்பிக்கையே உலகியலுக்கு மாறுபட்டது. எந்தத் தேவர் வந்து, எப்படி விளைவிப்பர்? - இவ்வாறெல்லாம் பிதற்றியிருப்பது அறிவியலுக்கும் ஏன் இறையியலுக்குமே பொருந்தாத அறிவின்மைக் கூற்றேயாகும். பொதுவறநூலில் மக்களுக்கியன்ற பொதுவறம் கூறுமிடத்தில் மத நச்சுநீர் பாய்ச்சுவது மாந்தவியலுக்கு அடாத செயலாகும். மேலும், விருந்தோம்பல் செய்வான் தெய்வ நம்பிக்கை யுடையனவனாக மட்டுந்தான் இருக்க வேண்டுமோ? அவ்வாறில்லாதானுக்கு விருந்தோம்பல் அறம் கூடுவதில்லையோ? அல்லது வேண்டாவோ? அத்தகையோனுக்கும், தேவர் வந்து உதவுவரோ? நடக்கதையிலும் படக்கதையிலும் மட்டுமே இவ்வாறு நடக்கும். வாழ்க்கையில் எங்குமே எவர்க்குமே இவ்வாறு இயற்கைக்கு மாறாக நடந்திருத்தல் இயலாது.

அறிவியல் கற்றுத் தேர்ந்தோர், இவ்வாறு மதவியலுக்கு அடிமைப்பட்டு, மூடநம்பிக்கைக் குழியில் விழுவதும் மாந்தப் பொது வறத்திற்கு இவ்வாறு சிந்திக்காமல் உரை கூறுவதும் ஆரியவியலுக்கு ஆட்பட்ட கூற்றே எனக் கூறிப் புறந்தள்ளுக.

6 இனி, பாவாணரும், விதை தெளித்தலும் வேண்டுமோ, வேண்டியதில்லை என்றே பொருள் கூறுவர். மேலும்,

(அ) வளமிக்க பண்டைக் காலத்தில் அறுவடை நாளில், வயலிற் சிந்திய மணிகள் களந்துார்க்கப் படாமலே கிடந்து, அடுத்துப் பெய்த மழையால், முளைத்து வளர்ந்து விளைந்திருக்கலாம் - என்றும்,

(ஆ) இனி, இக்காலத்தும் வித்தையும் சமைத்து விருந்தினர்க்குப் படைத்த வேளாளனது நிலத்தில், அவனுக்குத் தெரியாமல் இரவோடிரவாக வேறோர் அறவாணனான செல்வன் தன் சொந்த வித்தை விதைக்கலாம்' - என்றும், . . . .

இ) இனி, விருந்தோம்பல் முட்டுப்பட்ட விடத்துத் தனி நிலத்தில் விதைக்க வைத்திருந்ததை விதைக்கவும் விரும்புவானோ? விரும்பான் என்று வேறு ஒரு பொருள் கொள்வர், இதற்கு என்றும்

பல விளக்கங்கள் கூறிச் செல்வர்.