பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

294


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 294

செய்யவும், அல்லது தான் விருந்தைப் பேண வீட்டிலுள்ளவர்களை விதைக்க அனுப்பவும், அல்லது விருந்தைப் பேணி விடுப்பித்த பின்றை, அடுத்து வரும் அண்மை நாள்களில் விதைக்கவும் செய்யலாம் அன்றோ? இந் நிலையில் விதை போடுதலையும் விரும்பான் என்பது வெற்றுரையும் வினுரையும் ஆகுமன்றோ?

மேலும், விதைப்பதிலும் விருந்துக்கே முதன்மை தரும் தேவையற்ற நடிப்புணர்வு சிறப்பு நடைமுறையாகி, நிலையான அறவுணர்வுக்கு வலிவூட்டிவிடாதென்று கூறி விடுக்க

இதனால், இவரும் விதையாமலிருக்கும் நிலையைக் கருதினரே யொழிய, வித்திடல் வேண்டுவதில்லை என்னும் ஆசிரியரின் மூலக் கருத்துக்கு உரை காட்டவில்லை என்க. இவர் வேண்டும் கொல்லோ என்னுந் தொடருக்கு விரும்பும் கொல்லோ என்று பொருள் கருதி, விரும்பாது என்று கூறியவுரை புலம் என்னும் எழுவாய்க்கு ஏற்ற பயனிலையன்று என்று பகர்ந்து நீக்குக

5. புலம் - எழுவாய் வேண்டும் கொல்லோ - வேண்டப் பெறும்

கொல்லோ

- செய்யப்படுபொருள், செயப்பாட்டு நிலையில் பொருள் தந்தது


«Torås.

மிசைவான் என்பது, வழுவாயாக நின்றிருப்பின், இடல் வேண்டும் கொல்லோ என்பது பயனிலையாக நின்று, பொருள் பெற்றிருக்கும் என்க.

.ே ஈங்குக் கூறிய இவற்றால், குறளின் முதல் அடி, வித்தும் இடல் வேண்டும் கொல்லோ என்று கொள்ளப் பெறுவதில் உள்ள சிக்கல்களும், சறுக்கல், வழுக்கல்களும், இயற்கைக்கும் மாந்தவியலுக்கும், அறிவியலுக்கும், அறவியலுக்கும் பொருந்தாமற் போவதும், அவ்வடி, வித்து மிடல் வேண்டும் கொல்லோ என்று கொள்ளப் பெறுவதே அத்தனை இடர்ப்பாட்டிற்கும் உற்ற தீர்வாம் என்பதால் அதுவே பொருந்துவதும், புரை தீர்ந்த கூற்றுமாகும் என்று கொள்க. 7. இது, விருந்தோம்பல் அறம் பேணுவானுக்கும் அவன் செயல்களுக்கும் அண்டையயலார் மதிப்பும் துணையும் தருவர் எனும் உலகியலும் மாந்தவியலும் அறவியலும் கூறியதாம் என்க. Ꭴ.