பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

302


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 302

அது . உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா

மடமை மடவார்கண் உண்டு. 39

பொருள் கோள் முறை :

விருந்தோம்பல் ஒம்பா மடமை உடைமையுள் இன்மை; மடவார் கண் உண்டு.

பொழிப்புரை : விருந்தோம்புதல் பேணாத அறியாமை என்பது, செல்வம் இருந்தும் இல்லாத வறுமை போன்றது. இத்தகைய அறியாமை மூடர்களிடந்தான் உண்டு. -

சில விளக்கக் குறிப்புகள் :

? உடைமை : செல்வம் உடைமை.

2. இன்மை : செல்வம் இல்லாத வறுமை.

3. மடமை : அறியாமை.

மடங்குதல் என்னும் சொற்பொருளடியாகப் பிறந்த சொல். மடங்குதல் - கீழிருத்தல், சுருங்குதல், அடங்கிக் கிடத்தல், சுருண்டு கொள்ளல், மடிந்து நிற்றல் முதலிய பொருள்கள் தரும்.

மடவார் : அறியாதவர்கள்; மூடர்கள்.

5. விருந்தோம்புதலுக்கான செல்வம் உடைமை இருந்தும் ஒம்பாதது மடமை என்றார். அது விருந்தோம்புதலால் வரும் நன்மையை இழந்தது. பயனைத் தவிர்த்தது. எனவே ஒம்பாமை மடமையாயிற்று. - தங்காத - நிலையாத செல்வத்தைக் கொண்டு நிலையான பயனைப் பெறாத தன்மையினராதலால் மடவார் - மூடர் - பேதையர் என்றார். என்னை? பேதைமை ஏதங் கொண்டு ஊதியம் போக விடல் (83) ஆதல் பற்றி. -

6. ஒம்பர் மடமை மடவார்கண் உண்டு : என்பதற்குப் பரிதியார் விருந்து ஒம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு என்று பொருள் கண்டது, பெண்டிரை இழித்ததாகும். அஃது அறியாமை. . . . - ダ இது, விருந்தோம்பலால் வரும் நன்மையை உணராத அறியாத

மூடர்களின் தன்மை கூறியது. இது முன்னதனோடு பொருந்தியதாகலின் அதன்பின் வந்தது. O