பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

சில விளக்கக் குறிப்புகள் :

1.

துன்புறுஉம் இன்புறுஉம் : துன்புறும், இன்புறும் என்னும் சொற்கள் ஈற்றயல் நீண்டு அளபெடை பெற்றன.

துன்புறுத்தும் அல்லது துன்பம் செய்யும்; இன்புறுத்தும் அல்லது இன்பம் செய்யும்.

துவ்வாமை : -நுகர்வின்மையால் இல்லாமை, - நுகர்தற்கு ஒன்றும் இல்லாமை அஃதாவது வறுமை. - துவ்வுதல் - நுகர்தல் (அநுபவித்தல்). - அநுபவம் என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல். - வறுமை, இல்லாமை, நல்குரவு என்று சொல்லாமல், துவ்வாமை என்று கூறியது, உணவு மட்டன்றிப் பொருளால் வரும் உடை, உறையுள், மற்றுமான துய்ப்புப் பொருள்கள் இல்லாமையை விரித்து உணர்த்தியது. -

யார் மாட்டும் : யாவரிடத்தும், எல்லாரிடத்தும், * - சிலர் தம்மவரிடத்தும், முன்பே பழகியவரிடத்தும், தம்மினும் அகவையானும், செல்வத்தானும், நிலையானும் மிக்காரிடத்தும்

மட்டும் இன்சொல் உடையவராக இருக்கும் உலகியலால்,

அவ்வாறின்றி யாவர் மாட்டும் எனச் சிறப்பித்தார். இன்சொலவர்க்கு : இன்சொல் உரைக்கும் இயல்பு உடையவர்க்கு. வேறுபாடின்றி எல்லாரிடத்தும் பொதுவாகவே இனிய சொற்களைக் கூறும் இயல்புடையவரிடத்தில் எல்லாருமே அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பர். ஆகையால், அவர்க்குத் துன்பம் வரும்பொழுது அனைவரும் துணையாக இருந்து உதவுதல் இயல்பாகலின், அவர் வறுமைப்படுவதுமில்லை. அதனால் இல்லாமைப்படுவதும் இல்லை என்றார்.

இஃது இன்சொல்லை இயல்பாக உடையார்க்கு ஏற்படும் உலகியல் நன்மை கூறியது. O