பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

324


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 324 கரு பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணிஅல்ல மற்றுப் பிற. 95

பொருள் கோள் முறை :

ஒருவற்கு அணி, பணிவுடையன் இன்சொலன் ஆதல் மற்றுப் பிற அல்ல.

பொழிப்புரை : ஒருவனுக்கு அழகாவது அல்லது பூணத்தக்க அணியாவது பணிவுடையவனாகவும் இன்சொல் உடையவனாகவும் இருப்பதே மற்றவை பிறவெல்லாம் அழகோ அணியோ ஆகா.

சில விளக்கக் குறிப்புகள் :

í பணிவுடையன் : பிறர்பால் பணிவான நடத்தை உடையவன்.

அடக்கமும் அமைவும் பணிவு என்க.

2. இன்சொலன் : இனிய சொற்களையே பேசும் இயல்புடையவன். இயற்கையாக அவ்வாறிருப்பவனே இனிய சொற்களை உடையவனாக இருத்தல் இயலும்; அல்லது உலகியல் அழுத்தத்தால் அவ்வாறு தன்னைப் பழக்கிக் கொள்ளுதலும் சாலும் என்க. செயற்கையாக அவ்வாறு இருத்தல் இயலாமை. - இன்சொல் உடைமைக்கு முன் பணிவுடைமையைக் கூறியது, முதலில் தோற்றத்தானும், பிறகு சொல்லானுந்தாம் பிறரது கவனத்துக்கு உரியராகும் உலகியல் பற்றி என்க.

3. ஒருவற்கு : ஒருவனுக்கு என்று ஆண்பாற்படுத்திக் கூறுதல் புறப்புழக்கமும், விருந்துக்கு முன்னிற்கும் மிக்குடை நிலையானும் 盗YGö

- இஃதன்றிப் பொதுவான அறங்களை ஆண்பாலுக்குரியனவாகக் கூறுதல் எந்நூலாசிரியர்க்கும் இயல்பான தன்மையன்றிப் பெண்மையைத் தாழ்த்திக் கூறிய தாகாது என்க. ஆண்மையை முன்னிலைப்படுத்திக் கூறுதலில், பெண்மையும் அடங்கியதே என்க.

4. அணி : என்றது அழகு, அணிகலன் (நகை) இரண்டையும் குறிக்கும்.

-அழகு, கல்வி, செல்வம், நிலை (பதவி ஆகியவை பற்றிப் பணிதலும் இன்சொலும் பலரிடம் இல்லாமை உலகியலாதல் பற்றி முன்னவை