பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

4.

5.

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 பயக்கும் : தரும். தலைப்பிரியா : இருந்து விலகாத, இருந்து நீங்காத தலைபிரிதல் என்பது ஒரே சொல் - தலைக்கூடுதல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல். தலைக்கூடுதல் - வந்து சேர்தல், - இவ்வகை ஒட்டுச்சொற்கள் மரபுத் தொடர் (Idioms) என்று கூறப்பெறும். இவை இரண்டு சொற்களாகப் பொருள் கொள்ளுதல் கூடாது. இரண்டு சொற்களும் சேர்ந்து ஒரு சொல்லாகவே மரபு வழிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். தமிழில் இவ்வகைச் சொற்கள் நிறைய உண்டு. தலையை முதற் சொல்லாகக் கொண்டு வரும் மரபுச் சொற்கள் சில தலைகனத்தல், தலைகாட்டுதல், தலைகொடுத்தல், தலைகவிழ்தல், தலைக்கீடு, தலைசாய்த்தல், தலைகவிழ்த்தல், தலைதாழ்தல், தலைதொடுதல், தலைதருதல், தலைதின்னுதல், தலைநிமிர்தல், தலைநீட்டுதல், தலைப்படுதல், தலைப்புரட்டல், தலைபோதல், தலைமோதல், தலைப்பெய்தல் (கூடுதல், கலத்தல்), தலைபிணங்குதல் (ஒன்றோடொன்று மாறுபடுதல், தலைமடிதல், தலைமறைதல், தலைமுழுகல், தலைமுறை, தலைமேற்கொள்ளுதல், தலையழிதல், தலையாட்டுதல், தலையிடுதல், தலையிலடித்தல், தலைவெடித்தல் முதலியன. இவற்றுக்குப் பொருள் தெரியார் அகர முதலிகளைப் பார்க்க நயன் ஈன்று நன்றி பயக்கும் : என்பதற்குப் பரிமேலழகர், இம்மைக்கு நீதியையும், மறுமைக்கு இறந்த பின் அறத்தையும் பயக்கும் என்று பொருள் தருவது இட்டுக் கட்டிச் சொல்வதாகும். எங்கெங்கு வாய்ப்பிருக்குமோ அங்கங்கெல்லாம் ஆரியவியலைப் புகுத்துவதே அவர் கோட்பாடு என்க. . இங்கு இம்மையோ, மறுமையோ எந்த வகையிலும் பொருள் கொள்ளத் துளியும் இடமில்லை என்பதை உணர்க. பாவாணரும் அவரை அப்படியே பின்பற்றிப் பொருளுரைத்தல் மிகவும் வருந்தத்தக்கது. + - பண்பு விலகாத குறையாத இனிய சொற்களைப் பயன்படுத்து பவனை எல்லாரும் விரும்பி மதித்து; அவன் பால் நேர்மையாகவும். நடுநிலையாகவும், ஞாயமாகவுமே நடந்து கொள்ளுதலும், அதனால், அவனுக்கு நன்மை உண்டாதலும் இயல்பான உலகியற்கை இந்த உண்மைதான் இங்குச் சுட்டப்பெறுகிறது. பயன் ஈன்றல் : நன்மையைப் பெற்றுத்தருதல்,