பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

3

3

எனவே, இம்மை எனும் சொல்லுக்கு இப்பிறவி எனும் பொருளில்லை என்பது பெற்றாம். பெறவே, மறுமை என்பதற்கும் மறுபிறவி என்றும் பொருளில்லை என்று திண்ணமாய் அறிக - இனி, இம்மைப் பிறப்பு (1315 எனும் சொல்லாட்சி, பிறப்பில், உடலின்பம் துய்த்தற்குரிய இளமைக்காலப் பகுதியைக் குறிப்பதை ஆண்டு விளக்குவாம். - அதே போல், மறுமை என்று வரும், 459, 904, 1042, 1815 ஆகிய பிறவிடங்களிலும், இதிற் போலவே, வாழ்வின் பிற்பகுதி என்று வரும் பொருளையும் அவ்வவ்விடங்களில் பொருத்திக் காட்டி மெய்ப்பிப்போம். - முற்குறளில் (97) வந்த நயன் ஈன்று என்னும் தொடருக்கு, 'இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி என்றும் இட்டுக் கட்டி, ஆங்கு, சொல்லாலும் பொருளாலும் உண்மையாலும் இன்மையாகிய 'இம்மையைப் புகுத்தியவர், இதில் வெளிப்படையாக இம்மையும், அத்துடன் அதற்கிணைவான மறுமையும் கண்டவர், அணியமாகத் தம் கையினும், மனத்தினும் வைத்துள்ள வேதமதக் கருத்தையும், ஆரியவியலின் வழக்கையும் திணிக்காமல் விடுவரோ? வெறும்வாயை மெல்லுவானுக்கு, அவலும் வெல்லமும் கிடைத்தால், அதக்கியும் சுவைத்தும் மென்று விழுங்கானோ? அதுபோலும், இவர் ஈங்கு இம்மை, மறுமைக்குரிய பொருந்தாப் பொருள் கூறியதும் என்று விடுக்க இவ்விடத்தில், பாவாணரும் இவரைக் கைநெகிழ்க்காமல், பிடித்துப் பின் தொடர்வதே போல், இருமையிலும் இன்பம் விளைவிக்கும் என்று பொருள் கூறி, இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு என்றும், மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி என்றும், சென்று கண்டு வந்தாற்போலும் விளத்தம் தருவது, ஆழ எண்ணாமையே ஆகும். மேலும், அவர், இம்மை இன்பம் என்பது, ஐம்புல நுகர்ச்சி, நோயற்ற வாழ்வு அதிலும் நீடு வாழ்வு என்றெல்லாம் இலக்கணப்படுத்திக் கூறுவது கருதினால், இவ்வுலகில் பிறந்த எவனொருவனும் இம்மை இன்பத்தைப் பெற்றிருக்கவும் முடியாது. பெறவும் முடியாது என்றே முடிவுகொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு அரிதான ஒன்றை, சிறுமை நீங்கிய இனியவை கூறலாலேயே பெற்றுவிட முடியும் என்று பொருள் கூறுவது, வாய்க்கு வந்ததையே கூறுவதும், கைக்கு வந்ததையே எழுதுவதும் ஆகும். இஃதொரு வகையில் ஒன்றுமறியாப் பொதுமக்களைக் கவர்ச்சியான மூட நம்பிக்கையுள் ஆழ்த்துவதும் ஆகும்;