பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

334


'திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 334

அறங்கறுவது ஆகாது.

அறத்தால் வரும் பயன் இறும்பூதுக்கு (அற்புதத்துக்கு - Miracle) உரியதன்று தெய்வ இயலும் அன்று மாந்த வியலுக்கு உட்படுவதே; இயற்கையியலுக்கு (Naturity) பொருந்துவதே இயற்கை கடந்த (SuperNatura) நிகழ்வுகள் ஒருவாறு, காலம், இடம், பொருள் பொருத்தங்கள் நோக்கித் தெய்வ இயல் என்று கருதப்பெற்று வருகின்றன. ஆனால், அவை மெய்யறிவியல் ஆகா ஆனது பற்றித்தான் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள், மெய்பொருள் காண்ப தறிவு (355) என்பார்.

மெய்யறிவியல் உண்மையானது உணரக் கடினமானது. தெய்வவியல் கற்பனை கலந்தது; உணர்வானது; ஆனால் உணர்த்த முடியாதது; நம்பிக்கை கொண்டது.

மதவியல் மூடநம்பிக்கையானது; ஏமாற்று நிறைந்தது; அவரவர் காலத்திற்கும் இடத்திற்கும் இனத்திற்கும் உகந்த வகையில் வேறுபடுவது. அறியாத மக்களுக்குக் கவர்ச்சியானது.

- மெய்யறிவியல் இயல் போன்றது; தெய்வவியல் இசை போன்றது; மதவியல் நாடகம் போன்றது.

இவற்றுக்கிடையே, அறம் என்பது, இயற்கையியல், உயிரியல், மாந்தவியல், உலகியல், மனவியல், இனவியல், நாட்டியல், அரசியல், பண்பியல், பொருளியல் ஆகிய பத்துத் தன்மைகளும் கொண்டது. இவை இவ்வுரை நூலுள் ஆங்காங்குத் தேவையின் விளக்கப்பெறும். 3. இன்பம் மனத்தாலும், உடலாலும், உயிராலும் உணரப் பெறுவதோர்

உணர்வு.

-இது, மனத்தால் புலன்கள் வழியும், உடலால் பொறிகள் வழியும், உயிரால் மனம், உடல் இரண்டன் வழியும் நுகரப்பெறுவது. 4. இது, பண்பின் தலைப்பிரியா இன்சொல்லினும், சிறுமையுள்

நீங்கிய இன்சொல்லின் மேம்பாடும், மிகுபயனும் கூறியது. ஆகலின் அதன்பின் வைக்கப்பெற்றது. . . -

தது. இன்சொல் இனிதன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது. 99

பொருள் கோள் முறை :

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்