பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

போகும். அத்துடன் அச்செயல் முன்னரே நிகழ்ந்ததாகவும் வேண்டும். அதன் பின் காய் கவர்தல்' என்பது எங்ங்ன் பொருந்தும்? கவர்தல் என்னும் சொல், பறிப்பது, கையகப்படுத்துவது எனும் முறையான சொற்பொருளைத் தருவதால், உளவாக என்பதற்குக் கைக்கண் உளவாயிருக்க என்னும் பரிமேலழகரின் பொருள் பொருந்தாது என்க. இனி, இவரோடு இணையாமல் மணக்குடவர், பழமும் காயும் ஓரிடத்தே யிருக்க என்றும், காலிங்கர் நம் இல்லகத்து இனிய கனி உளவாயிருப்ப' என்றும் பொருள் கூறித் தப்பினர். இவற்றைக் கவிராசபண்டிதரும் காகவும், இனிய பழங்கள் தன்கையில் இருக்கும் போது என்று, பரிமேலழகருடன் இணைந்தே நின்றனர். பாவாணரோ, கனிகளும் காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும் என்று ஒருவாறு பொருந்தும் பொருள் கண்டார். இனி, 'உளவாக என்னும் சொல் தானுடைமைப் பொருள் தருதல் போல், இருப்ப' என்னும் சொல்லும் தானுடைமைப் பொருள் தரும். எனவே, "கவர்தல் என்னும் சொல்லுக்குத் திருடித் தின்பது என்று சிலர் பொருள் காண்டதும் பொருந்தாது என்க. 5 இனி, இனிய என்பதற்குக் கனியும், இன்னாததன்பதற்குக் காயும் உவமை கண்டது, இனிய சொல்லிற் கனிவு இருப்பதையும், இன்னாச் சொல்லில், காய்தல் பொருளான எரிவும் வெறுப்பும், வெகுள்வும். இருப்பதையும் கண்டு நயந்து மகிழ்க 6. இனி, கனி என்பதற்கு ஒளவையுண்ட நெல்லிக்கனி போல, என்றும், 'காய் என்பதற்குக் காஞ்சிரங்காய் போல நஞ்சானது என்றும் பரிமேலழகர் காட்டுவது, அவையிரண்டும் இனமொன்றாதை ஆகலின், இணையாததும் மிகையானதும் ஆகும் என்க. . Z இஃது, இனியவை கூறுதலின் தன்மையும் நன்மையும் முற்றக்கூறி

O.