பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 26

அறியப்பெறுகிறது. அவற்றை அவர் அறிந்திருக்கவே முடியும். ஆனால், ஏனோ அவற்றாலெல்லாம் அவர் கவரப்படவில்லை என்றே தெரிகிறது.

அவர் இந்நூலுள் கடவுள் என்னும் சொல் தவிர, இறை இறைவன், தெய்வம் என்னும் மற்றிரண்டு சொற்களையும் பயன்படுத்தியுள்ளார். இறை என்னும் சொல், ஏழு இடங்களில் (388, 541, 547, 54, 733, 847, 1157 வருகின்றது. இவற்றுள், ஒரே ஓர் இடத்தில் (388) மட்டுந்தான் அஃது இறைவனைக் குறிக்கிறது. மற்ற, இரண்டு இடங்களில் (547, 564) அரசனையும், ஓர் இடத்தில் (54) அரசு அல்லது நடுநிலையையும், ஒர் இடத்தில் (733) இறைப்பொருளையும், ஓர் இடத்தில் (84 வருத்தத்தையும், மற்று ஓர் இடத்தில் (115 மணிக்கட்டையும் குறிக்கின்றது.

அதேபோல், இறைவன் என்னும் சொல் ஐந்து இடங்களில் (5, 10, 690, 733, 778 வருகிறது. இவற்றுள் இரண்டு இடங்களில் (5, 10 மட்டும் இறைவனைக் குறிக்கிறது. மீதி மூன்று இடங்களிலும் 690, 733, 778) அரசனையே குறிக்கின்றது. -

இனி, தெய்வம் என்னும் சொல் ஆறு இடங்களில் (43, 50, 55, 619, 702, 1023 வருகிறது. அவ்வாறு இடங்களிலும் அது தெய்வத்தையேதான் குறிக்கிறது. -

இம்மூன்று சொற்களின் பயன்படுத்தங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது, திருவள்ளுவர் அனைத்து நிலைகளின் மூல முதற்பொருளாகிய இறைமை அஃதாவது இறைவனையும், மாந்த நிலையினின்று மேம்பட்டு உயர்ந்த தெய்வ நிலையினையும் ஒப்புகிறார். கடவுள் நிலையை அவர் கருதவில்லை, அல்லது ஏற்கவில்லை என்றே தெரிகிறது. தமிழியலும் ஆரியவியலும் :

இதற்கு ஒரே ஒரு கரணியந்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அஃது, இறைமையுண்மையையும் தெய்வ உண்மையையும் ஏற்கனவே உள்ள, ஆரியம் கலவாத தமிழியல் நிலைகள் என்றும், கடவுள் நிலை ஆரியவியல் பெரிதும் கலந்த கலப்புநிலை என்றும் அவர் கருதியதாகத் தெரிகிறது. ஆம், கடவுள் நிலைகளில்தான் ஆரியம் பற்பல கடவுளர்களை உருவாக்கித் தமிழர்தம் மெய்யியலையும் (Philosophy), இறையியலையும் (Theology) ஒரு கலக்குக் கலக்கியிருக்கிறது. கடவுளர், கடவுளாளர் என்று கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பிற்கால நூல்களில் வரும் பல கடவுள் கொள்கை (Pantheism) ஐயப்படாது ஆரியவியல் சார்ந்ததே என்க. மிகப் பிற்கால நூல்களில் இறைவர், தெய்வ கணங்கள் என்றும் குறித்திருப்பதும் ஆரியவியல் நன்கு வேரூன்றிவிட்டதைக் காட்டும். இராமன், கிருட்டிணன், மற்று விண்ணு (விஷ்ணு)வின் பத்து திருவிறக்க அவதாரக் கொள்கையெல்லாம் முழுக்க முழுக்க ஆரியவியலைச்