பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

29


29 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

- என்னும் கம்பரது பாடல் இங்குக் கருதத் தக்கது. இன்னும் சொல்வதானால், நம் மலக்குடலுக்குள் உள்ள மலத்திரளையுள் நெளிந்து கொண்டிருக்கும் ஒரு புழுவுக்கு ஓர் அறிவுநிலை தோன்றி, நான் எங்கிருக்கிறேன், யாரால் இருக்கிறேன், என்னை யார் உருவாக்கியவர்: என்றெல்லாம் வினாவெழுப்பி ஆராய்வது போலாகும் இது. இனி, அதனை உருவாக்கியவரைக் காண விரும்பும் முயற்சியும் ஆகும் அது. உண்டு, இல்லை - என்பதற்கு விடையில்லை: -

இனி, உண்டு, இல்லை என்னும் கருத்துக்கு விடையையும் யாராலும் காட்ட வியலாது. காரணம் இவ்வுலகில் வாழ் உயிரினங்களுள், சிந்திக்கும் ஆற்றல் உள்ள மாந்த இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பருப்பொருள்களும் மற்றும் மக்களுக்குத் தோன்றும் கருத்துகளும்கூட நேர், எதிர் (Positive, Negative என்னும் இருதன்மை உடையவனவாக இருப்பதை நாம் நுண்மையாக நோக்கினால் உண்மை விளங்கும். இவ்வெதிரெதிரான கூறுகளே உலகின், உயிரின் அனைத்து இயக்கங்களுக்கும், ஏன் மொழிக்கும், கருத்துக்கும், அறிவுக்கும்கூட, மூலக் காரணமாக உள்ளன என்பதை நாம் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்வெதிரெதிரான தன்மைகள், அல்லது கூறுகள் இலவாயின் உலக இயக்கமே தடைப்பட்டுப்போகும், எந்தவொன்றும் இயங்கவே முடியாது. எனவேதான் இதன் இயங்கியல் அமைப்பே, இல்லை, உண்டு என்னும் கருத்துக்கும், எதிரெதிரான பண்புக்கும், பொருள்களுக்கும் காரணமாக இருப்பதை உணர்ந்து கொள்க இயக்கமும் எதிர் இயக்கமும்:

ஒவ்வோர் இயக்கத்திற்கும், அதற்கு நேரான அதே சமமான soft payaol u gråtñuuääth on 2 Giró. (For every action, there is an opposite and equal re-action) argårug, Quârâugi, 2 airsolous:T3pm அதனால்தான் இறைக்கொள்கையிலும் உண்டு, இல்லைக் கொள்கை என்றும் இருந்தே இருக்கும். மெய்ப்பொருளியலைப் பொறுத்தவரை இவ்விரண்டு கொள்கைகளுமே சரி எனலாம். தேங்காய் இருக்கிறதா, இல்லையா?

இதனை, ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவோம்.

மண்ணில் புதைத்த தேங்காய் மரமாகிறது. அதிலும் தேங்காய்கள் இருக்கின்றன. இப்பொழுது மூலத் தேங்காய் உள்ளதா, இல்லையா என்னும் வினாவிற்கு விடையென்ன? உண்டு என்பதும் இல்லையென்பதும் சரியான விடைகளே! எப்படி?

மூலத் தேங்காய்தான் இத்தனையுமாக (மரமாயும், மட்டையாயும்,

பலநூறு தேங்காய்களாகவும் விரிவு பெற்றிருக்கின்றது. அதனால் அந்தத் தேங்காய் இல்லையாகிவிடவில்லை; உண்டு. . . ." . .