பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

35


அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

3

5

பகுத்தறிவு என்பது புலனுணர்வுகள் (perception) வழியாகக் காரணமுறையில் (Reasonable) மனம் ஒர் உண்மையைக் காண்பதும், பின் அவற்றைத் தொகுத்து, ஒன்றோடு ஒன்றை ஒப்பவைத்துப் பார்த்து (comparitive study) அறிவால் இறுதியாகத் தேர்ந்து, முடிவு செய்வதும் ஆகும். ஆனால், இதுவன்றி இன்னோர் அறிவு முயற்சியும் நம்மிடம் உண்டு. அஃது உள்ளுணர்வால் (intution) காணுவது. இதைத்தான் அகக்கண்ணால் - மனக்கண்ணால் - காணுவது என்று மெய்யறிவாளரும், uoganu lauIraITGB,ử (ReligionistS) ớng)/8'aốIpsăTrĩ. LosỡraứìusorTU;th (Psychologists) இதனை ஒப்புகின்றனர். -

புலனுணர்வுகளால் விளங்கிக்கொள்ள முடியாத உண்மைகளை, இன்னும் நுட்பமாக உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு உள்ளுணர்வுதான் துணைசெய்ய முடியும் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.

அறிவு (Knowledge) என்பது, பொறிகள் வழியாக உணரும் புலனுணர்வு. அஃதாவது, கண்ணால் பார்ப்பது, காதால் கேட்டது, நாவால் சுவைப்பது, மூக்கால் முகர்வது, மெய்யால் ஊறுணர்வால் - உணர்வது - ஆகிய இவையெல்லாம் தனித்தனியாக மூளை உணர்கின்ற நிலையைத் தொகுதியாக்கிப் (compilation) பார்க்கின்ற ஒரு நிலையே ஆகும்.

இவற்றை, ஏற்கனவே அறிந்து முடிவுசெய்த உண்மைகளுடன், ஒப்பவைத்துப் பார்த்துச் சரி இது, சரியில்லாதது இது என்று, நமக்குத் தெரிந்த அளவில் முடிவு செய்யும் ஓர் உணர்வுதான் பகுத்தறிவு என்பது.

புறமனமும் அகமணமும்.

இந்த இரண்டு அறிவு நிலைகளையும் உணர்வது புறமனம் (Conscious Mind) என்னும், நமக்குள் இயல்பாகச் செயல்படும் மனமாகும் என்பது மனவியலறிஞர்களும் மெய்யறிவியலறிஞர்களும் ஒப்புக்கொள்ளும் உண்மை. இதை மதவியலறிஞர்கள் வேறுவகையில் விளக்கியும் கூறுவர். அது நமக்கு இங்கு வேண்டா. - -

இங்குக் கூறிய புறமன உணர்வால்தான் நாம் பொதுவாக அறிகிறோம்; உணர்கிறோம்; பேசுகிறோம்; அன்பு செலுத்துகிறோம்; வெறுப்பு, பகை முதலியன கொள்கிறோம். மற்றும் உலகியல் தொடர்பான அனைத்துச் செயல்நிலைகளிலும் ஈடுபடுகிறோம். -

ஆனால், இவற்றுக்கும் மேலாக நம்மிடம் உள்மனம் (Sub-conscious Mind) என்று ஒன்று உள்ளது என்பது சிலர்க்கே தெரியும். அந்த உள்மன உணர்வை உள்ளுணர்வு நேரடி உணர்வு - மெய்யறிவு (intution) என்று மனவியலறிஞர்கள் கூறுகின்றனர். அறிவிற்கும் அப்பாற்பட்டு இயங்குகிற, உண்மைகளை அறிவதற்கு இந்த உள்ளுணர்வு (intution தான் உதவுகிறது.