பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 46

இப்படி எனலாம், அப்படி எனலாம். அஃது அவரவர் மன நிலையையும் அறிவு வளர்ச்சியையும் பொறுத்தது.

ஒன்றே என்னின், ஒன்றேயாம்:

பலவென் றுரைக்கின் பலவேயாம்! அன்றே என்னின், அன்றேயாம்:

ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின், இன்றேயாம்!

உளதென் றுரைக்கின் உளதேயாம்! நன்றே நம்பி குடிவாழ்க்கை -

நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

- கம்ப. கடவுள் வாழ்த்து. தன்னுள்ளே உலகங்கள் எவையும் தந்து, அவை தன்னுள்ளே நின்று. தான் அவற்றுளே தங்குவான் பின்னிலன் முன்னிலன் ஒருவன் போகிலன், தொன்னிலை ஒருவரால் துணியற் பாலதோ?

. . - கம்ப. இரணியன்வதை .59 எனும் கம்பரின் மெய்ப்பொருள் கூற்றுகள் இங்கு நினைக்கத் தக்கன. அத்துடன் எல்லாவற்றுக்கும் மனமே காரணம் என்பதையும் நாம் இவ்வகையில் நினைத்தல் தகும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் (34) என்றும், மனநலம் மன்னுயிர்க்காக்கம் (45) என்றும் ஆசிரியர் கூறுதலும் காண்க. இதுபற்றித் திருமூர் பெயரால் கீழ்வரும் பழஞ்செய்யுள் ஒன்றும் வழங்குகின்றது. - . .

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் மனமது செம்மையானால் மற்றதும் செம்மையாமே!

- திருமூலர் இவற்றுடன் திருநாவுக்கரசரின்

பண்ணில் ஒசை பழத்தினில் இன்சுவை பெண்ணொடு ஆணென்று பேசற் கரியவன் வண்ண மில்லி, வடிவுவே றாயவன் கண்ணில் உள்மணி கச்சியே கம்பனே!

. - - - திருக்கச்சியேகம்பம்

என்னும் பாடலையும் கருதுக.