பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 58

1 மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் · ೧575ು, 46 அஃதாவது மெய்யெழுத்துகள் அனைத்து உயிரெழுத்துகளுடனும்

பொருந்தி ஒலிக்கும். . க் + அ = க; ம் + அ = ம; ப் + அ = ப - அதுபோல், அனைத்து உயிர்மெய்களிலும் இறைவனாகிய 'அ' பொருந்தியிருக்கிறது, என்க. 2) உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா - தொல். 60 - அஃதாவது, உயிரெழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் அன்றி, மெய்யெழுத்துகள் மட்டும் சொற்களின் முன் வருவதில்லை. அன்பு, இரக்கம், ஈகை, உண்மை. கனிவு, பிறப்பு, நீக்கம், முன்பு. அதுபோல் உயிரற்ற வெறும் உடம்புகள் இயங்குவதில்லை, என்க.

3) மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே. தொல். 18 - அஃதாவது, உயிருள்ள ஓர் உடம்பில் உயிர் தெரிவதில்லை. உடம்பு மட்டுந்தான் தெரிகிறது. ஆனால் அதில் உயிரும் கலந்திருக்கிறது. எதுபோல் எனின் உயிர்மெய் எழுத்தில் உயிர் கலந்திருப்பது போல். அத்துடன், முதலில் தெரிவது உடல்; அந்த உடலில் உயிர் கலந்திருப்பது, அவ்வுடல் ஒலிப்பதிலிருந்து பின்னர்த் தெரியும். எதுபோல் எனின் உயிர்மெய் எழுத்தில் முதலில் தெரிவதும், ஒலிப்பதும் மெய்யெழுத்தே உயிர் அதன் பின்தான் ஒலிக்கும், ஆனால் காட்சிக்குத் தெரியாது. - க்+அக, க என்று ஒலிப்பின், அவ்வொலியில் முதல் ஒலியாக 'க்'-உம், இரண்டாவது ஒலியாக, முடிவில் அவும் ஒலிப்பது காண்க . 4 மெய்யொடு இயையினும் உயிரியல் திரியா

- . - தொல். 10 - அஃதாவது, மெய்யெழுத்தோடு உயிரெழுத்து சேர்ந்து ஒலிப்பினும் உயிர் ஒலிப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. . 'ம' என்று ஒலிக்கும் போது, முற்றொலியாக வரும் அந்த 'அ' ஒலி கெடுவதில்லை; மாற்றம் அடைவதும் இல்லை. அதுபோல், உடம்போடு உயிர் இயங்கின்ாலும், அந்த உயிர்க்கு முன்னரே உள்ள தன்மைகள், (அஃதாவது அறிவு, மன, குண நிலைகள் வேறுபடுவதில்லை. ஒருவன் இயற்கையாகவே அறிவு நுட்பத்துடனும், நல்ல மன, குணங்களுடனும் இயங்குவதும், பிறிதொருவன் அறிவு, முட்டுப்பாட்டுடனும், தீய மன, குணங்களுடனும் இயங்குவதும்