பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்

59


59

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் -

காண்க. இவை பிறப்புச் சூழலாலோ, வளர்ப்புச் சூழலாலோ அல்லது வாழ்க்கைச் சூழலாலோ ஏற்படுவதில்லை. பிறவியிலேயே உயிர்க்குள்ள உணர்வும் குணமுமாம் என்க. என்னை? நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் (373) என்றும், உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (667) என்றும், எனை வகையான் தேறியக் கண்ணும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (514) என்றும், உயிர்நிலைகள் திரியா உண்மை காட்டுவர். தயையும் கொடையும் பிறவிக் குணம் என்றார் ஒளவையாரும்,

5) பன்னி உயிரும் தந்நிலை திரியா, - - - தொல், 84 - அஃதாவது, உயிரெழுத்துகள் பன்னிரண்டும், (அஃதாவது, நாம் முன்னர்க் கூறியது போல் அகரமும் நெடிலும் தவிர்த்த ஏழு உயிரெழுத்துகளும் தனித்து இயங்கினும் மெய்யெழுத்துகளோடு எந்நிலையில் இயங்கினும், தம் இயல்பாம் தன்மைகளிலிருந்து திரிபடைவதில்லை. அவை போலவே, எந்தெந்த உடல்களில் உயிர்கள் வந்து பொருந்தி இயங்கினாலும் அவ்வவற்றின் உயிர்களுக்குண்டாம் இயல்புத் தன்மைகளிலிருந்து அவை மாறுபடுவதில்லை, என்க.

5) மெய் உயிர் நீங்கின் தன்னுருவாகும். - தொல். 139 - அஃதாவது, மெய்யெழுத்தை விட்டு உயிரெழுத்து நீங்கிவிட்டால், மீண்டும் அதன் இயல்பான உருவையும் ஒலியையும் எய்தும். கடிக்-அ - - அதுபோல், உடம்பினின்று உயிர் நீங்கிவிட்டால், இயல்பாக அது தன்னிலையில் இயங்கி நிற்கும், என்க. 7) - இனி, தொல்காப்பியர் மட்டுமன்றி, பவணந்தியாரும் (12ஆம் நூற்றாண்டு தம் நன்னூலில் எழுத்தியல் தொடர்பாகக் கூறும் பல நூற்பாக்கள் உயிரியக்க உண்மைகளைக் கூறுவன. அவற்றுள் எடுத்துக் காட்டாக ஒன்று காண்க. -

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவ தியல்பே' - நன்னூல் 204

- இது, மெய்யெழுத்தோடு உயிரெழுத்து வந்து இணைவது இயல்பாக நிகழ்வது என்பதை உணர்த்துகிறது. -

- அதே பொழுது, தனியே இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் பிறவியை விரும்பித் தனக்கோர் உடலைத்தேடி, அதனோடு பொருந்தி