பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 64

翌一。

என்றும், உணர்த்தவல்ல ஆசிரியன்வழி ஒரு சொல்லின் பொருளை அறிந்தால், அப்பொருளுக்கு எந்த வகையான மயக்கமும் நேராது, உண்மை உணர முடியும் என்பதை உணர்த்த,

பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்

- தொல். 875. என்றும், சொற்களின் பொருள்களுக்குக் காரணம் உண்டு, ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது. ஆராய்ந்து பார்த்தே உணர முடியும் என்றும் புலப்படுத்த, - -

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா

தொல். 377, (விழிப்ப-பார்த்த மட்டிலேயே வெளிப்படையாக) என்றும் கூறியிருப்பனவற்றை உணர்ந்து கொள்க. 4) இக்குறளின்வழி, எழுத்துகளும், எழுத்துகள் சேர்ந்த சொற்களும், சொற்கள் இணைந்த தொடர்களும், தொடர்கள் நிறைந்த மொழியும், இறையுண்மையை நன்கு அறிவதற்கு முதல் சான்றாய் உள்ளதை உலகினர்க்குப் புலப்படுத்தினார் என்க. இக் கூற்றைத் திருமூலர் வழிமொழிதல் போல்,

‘என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே

- திருமந். 81. அஃதாவது, தன்னுடைய இருப்புண்மையையும், இயக்கவுண் மையையும், மயக்கமின்றித் தமிழில் வெளிப்படுத்தத் தம்மை அத் தமிழ்மொழியிலுள்ள உண்மைகளை உணருமாறு செய்யும் நல்ல நோக்கத்துடன், நிறைவுற, நன்கு பிறப்பித்துள்ளான், இறைவன் என்று கூறுவதும் காண்க. O

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2

பொருள் கோள் முறை:

வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், கற்றதனால் ஆய பயன் என்கொல்.