பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 66

3)

4)

6)

போற்றிக்கொள்வதுமே என்றுணர்த்தினார். கற்றபயன் - வாலறிவை - வாலறிவனை உணர்தல். அவ்வாறு உணராது நிற்பது பேதைமை என்க. என்னை? ஒதியுணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் (834) என்றும், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்றும் கூறுவது காண்க - . கற்றுணர்ந்து அடங்கல் 'ஆன்றவிந்து அடங்கல்' என்றார் பிறரும் அடங்கல் - அதன்படி நடத்தல். என் கொல் - என் என்பது வினா - ஒன்றுமில்லை என்னும் பொருள் தந்தது. கொல் - ஆசை - .

வாலறிவன் - ஒளியுருவாய் நிற்கும் அறிவுணர்வாய இறைவன். -

இறைமையை வடிவமும் பாலும் புணர்த்தி இறைவன்

எனறாா. X- -. - -

நற்றாள் - நல்ல தாள் - நல்ல படைப்பு முயற்சிகள். உலகின் இயற்கையும் உலக மாந்தர்தம் இயற்கையும் கண்டு அவற்றுக்குகந்தபடி ஒழுகுதல் என்னை: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் (40) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான், மற்றையான் செத்தாருள்

வைக்கப்படும் (214) என்று கூறுவார் ஆகலின்.

தொழாஅர் எனின் - போற்றி உணர்ந்து புரந்துகொள்ளார் எனின் தொழுதல் போற்றி உணர்ந்து புரந்து கொள்ளுதல். என்னை? செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) என்பார் என்க. - - இனி, கற்றவர்களே அச்சமின்மையானும் கல்விச் செருக்காலும், பொருட்கூறு உணர்ந்தவழி உலகுண்மை (உலோகாயதக் கருத்தால் பொருட்பகுக்கும் கருவியறிவு (அஃதாவது அறிவியலறிவு) கொண்டவராக இருப்பாராதலாலும், அதனால் காரணவறிவாகிய மெய்ப்பொருட்கூறு அவரால் மறுத்தற்படுமென்று கருதி, அவர்க்குக் கூறினார் என்க. . . . . - - கல்லாதவர் அச்சத்தாலும், பெரியோர்வழி நம்பிக்கையானும் ஒரு தொழல் உணர்வு கொண்டேனும் எதிர் நடவடிக்கையின்றி அமைந்திருந்து, மனநலமும் அதன்வழி வாழ்வு நிறைவும் இயல்பாகப் பெறுவார் ஆதலால் அவர்க்குக் கூறுதல் வேண்டாதாயிற்று, என்க. - -

- எனவே, கல்விப்பயன் இறையுணர்வு பெறுதல் என்று - உறுதிப்படுத்தியவழி, அது தெரியவும் தெளியவும் கற்க