பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

68


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 68

3)

4)

6)

நீடு புகழ் - நெடும் புகழ் நிலைத்தல், பிறிதோரிடத்து நீள் புகழ் (234) என்பார். மூல அறமுதலாகிய இறையுணர் வைப் போற்றி, வாழ்க்கையைப் புகழ்ப் பயனாக்கிக்கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கம் கூறினார், என்க. 'இசைபட வாழ்தல் உயிர்க்கு ஊதியம் (23) என்றும் உரைப்பார்.

மலர் மிசை ஏகுதல் மெய்யுணர்வு தோன்றுதல் 'ஐயுணர்வெய்தியக் கண்ணும் (354) எனப் பின்னரும் இக்கருத்தைப் பயன் முறையில் விளக்குவார். மாண்டி சேர்தல்: அறமுதல் உணர்வின் - இறையறத்தின் நெறிகளைப் பின்பற்றுதல். - அடி சேர்தல் - பின்பற்றுதல், நினைத்தல், போற்றல். நெஞ்சத் தாமரையில் வந்து பொருந்தினானை எங்கன் நாம் நினைப்பது போற்றுவது - பின்பற்றுவது? மனத்தை மனவுணர்வால்தான் சேர முடியும். எனவே, மனவழிச் சேர்தலை இடைவிடாது நினைத்தலை - மனத்தை அவன் வயப்படுதலை - அவன் நெறிப்படுதலை ஈண்டுச் சுட்டினார் என்க. இஃது ஒருவகை மனவழிபாடும் ஆகும். என்னை வழிபடுதல் - பின்பற்றுதல். - இதில் மனவழிபாட்டைக் குறித்தவர், இருள்சேர் இருவினையும் (5) என்பதில் மொழி வழிபாட்டையும், கோளில் பொறியில் () என்பதில் மெய் வழிபாட்டையும் குறித்தார் என்றும் கூறலாகும். மனத்தின்கண் மெய்யுணர்வு தோன்றி, இறைமையுணர்வு உள்ளத் தில் நிரம்புதலால், அதைக் கோயிலாகவும் உருவகிப்பர். அதன்வழி உடம்பையும் கோயிலாகக் கொள்ளும் கற்பனையும் வளர்ந்தது. "மறையுமாய், மறையின் பொருளுமாய் வந்தென்

மனத்திடை மன்னிய மன்னே” -

- - திருவா. கோயில் திருப். 5 "அறவையேன் மனமே கோயிலாகக் கொண்டான்.

அளவிலா ஆனந்தம் அருளி'

- திருவா. பிடித்த பத்து. 6 "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" - - -

- - திருமத். 1823