பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

74


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 74

பொழிப்புரை: தனக்கு இணையாக வேறோர் உவமை இல்லாத அறமுதலோனாகிய இறைவனது அறமுயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அறநெறியாளர்களுக்குத் தவிர, மற்றையவர்களுக்குத் தங்கள் மனத் துயரங்களை நீக்குவது கடினம்.

சில விளக்கக் குறிப்புகள்:

2)

தாள் சேர்தல் - முயற்சிகளில் ஈடுபடுதல், மனக்கவலை என்பது மனத்தில் எண்ணியது செயலில் நிறைவேறாமையால் ஏற்படும் ஏக்க உணர்வு. அறவுணர்வொன்றினாலேயே மனமும் செயலும் ஒன்றி மனமகிழ்வு ஏற்படும். இறைமையின் அறவாழ்க்கையைத் தவிர்த்தால் வாழ்க்கை துன்பமுடையதாகும் என்றார். தனக்கு உவமை இல்லாதான் எந்த ஒன்றையும் அவனுக்கு உவமையாகக் காட்ட இயலாத தன்மையுடையவன். அகரமுதல என்னும் குறளில் கூறப்பெற்றது, அவனது இருப்புக்கு ஆன உவமையேயன்றித் தன்மைக்கு அன்று.

- இங்கு,

அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ னாதே! என்னும் திருநாவுக்கரசரின் கூற்று நினைத்தற்குரியது. கடவுளொடு குருவையும் கடவுளாகவே கொண்டு வணங்குவாரையும், ஆதிபகவன் முதல் குருவே என்பாரையும் இக்குறள் கருத்து மறுக்கின்றது. தனக்குவமை இல்லாதான் என்று கூறியதால், இறைமையொடு ஒப்பவைத்துப் பேசப்பெறுபவர் எவருமிலர் என்பது ஆசிரியர் கருத்தாதல் புலப்படுகின்றது. புலப்படவே, அவனது அறமுயற்சிகளையே பற்றி நினைப்பார்க்கல்லால் மனக்கவலையை மாற்றுவது அரிது என்றாகிறது.

அறிஞர்,அப்பாத்துரையார், தம் மணிவிளக்கவுரையில், இதற்கு

மறுப்பளிப்பார் போல் கீழ்வருமாறு கூறுவர்.

"இதுபோல ஆதிபகவனும் பகவரும் கடவுளுருவாயினராகவே

கொள்ளப்படுதல் மரபானாலும், அவர்கள் கடவுளின் கண்காணா ഉിലിങ്ങ கண்கண்ட நிழல்கூறுகள் அன்றி வேறல்லர். எனவே,