பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அ_1-1 - அறமுதல் உணர்தல் - 1

என்றே அறம் குறிக்கப் பெறும் தர்ம என்பதற்கு ஞாயம், நெறிமுறை, கடைப்பிடி, மதவியல் கடமை religious duty) வகுக்கப்பெற்ற நடவடிக்கை, வருணவொழுக்கம் என்னும் பொருள்கள்தாம் உண்டு. இவையெல்லாம் தமிழியலில் கூறப்பெறும் அறம் என்னும் சொற் பொருளை ஒருவாறாகவே விளக்குவன. இவையெல்லாம் ஒருங்கிணைந்த நடைமுறையே அறம்' என்பதற்கு ஒருவாறு பொருந்தும், அறம் என்பதற்கு இந்தியாவுக்கு வெளியே சரியான சொல் கிடையாதென்பர் அறிஞர் அப்பாத்துரையார், தம் மணி விளக்க உரையில். - ஆனால் இந்தியாவுக்கு வெளியே என்பதைத் தமிழியலுக்கு வெளியே என்பதே சரியாக முடியும் என்று கருத இடமுண்டு. இனி, பிறவாழி என்பதற்குப் பொருள் கூறுகையில், அறிஞர் அப்பாத்துரையார், அறவாழி என்று கூறப்பட்டதால், பிற ஆழி என்பது பொருள் வாழ்வாகிய ஆழியும், இன்ப வாழ்வாகிய ஆழியும் குறித்தது என்பர். அது பொருந்தாது. என்னை? பொருளும் இன்பமும் கூட அறத்தின் வழிப் படுஉம்' என்பதால் அவையிரண்டும் அறத்திற்குள்ளேயே அடங்கும் என்க. எனவே பிறவாழி பிறவிக் கடலையே குறித்ததாகும். - . - இதன் பிற விளக்கங்களை 'அறன் வலியுறுத்தல் அதிகார முன்னுரையில் காண்க. 6. இறைமையின் அறவாழ்க்கையை ஏற்றால் வாழ்க்கை மகிழ்வாகவும் எளிதாகவும் இருக்குமென்றும் அல்லாதார்க்கு அது கடிதாக இருக்குமென்றும் கூறினார். - O

க. கோளில் பொறியில் குணமிலவே. எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. - -

பொருள் கோள் முறை:

எண் குணத்தான் தாளை வனங்காத்தலை

கோளில் பொறியில் குணமிலவே.