பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sı

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

போலும்.

அடுத்து, இவற்றை மிக ஆழ்ந்து நோக்குகையில், இவை அனைத்தும் குணங்கள் பண்புகள் - (Quality) என்று சொல்வதற்கு உரியனவாகத் தெரியவில்லை. தன்மைகள் (Naturity) இயல்பாம் நிலைகள் - என்று சொல்லப்பெறுவதற்கே உரியவை.

ஆங்கிலத்தில் குணத்தைக் குறிக்கும் மிகச் சரியான சொல் இருப்பதாகத் தெரியவில்லை.

Quality, Nature, attribute, character, disposition grassyth Glæstp%ir, குணத்தை, பண்பை, இயல்பை, தன்மையை, நடைமுறையை எல்லாம் குறிப்பன வேனும் குணம்’ என்னும் தமிழ்ச் சொல்லினி கருப்பொருளை இவற்றுள் ஒரு சொல்லும் குறியாது.

எடுத்துக்காட்டாக Quality என்னும் சொல் குணம், பண்பு, தன்னியல்பு, தரம், நயம் முதலிய அனைத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாக உள்ளது. - -

தமிழில் குணம், பண்பு, நடத்தை, இயல்பு, தன்மை - முதலிய சொற்கள் ஒன்று போல் பயன்படுத்தப் பெற்றாலும் பல நுட்ப வேறுபாடுகள் கொண்டவை. குணம் - தூய தமிழ்ச் சொல்; வட சொல் அன்று. வடமொழியில் வழங்குகிறது, அவ்வளவுதான். மூலம் தமிழில்தான் உண்டு. 'குண் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். குண்ணுதல் அண்ணுதல் - அணுத்திரட்சியால் உருவாகும் இயற்கைத் தன்மை, அஃதாவது அறிவும் மனமும் உடலும் ஒன்றிய உணர்வு. பிறவிப் பண்பு. - பண்பு - பண்படுத்தப்பட்ட தன்மை Cultivated mind பிறந்த பின் அமையும் தன்மை.

நடத்தை - நடந்துகொள்ளும் தன்மை - behaviour Conduct-சூழலுக்குப் பொருத்தமானது.

இயல்பு - தன்மை இயற்கைத் தன்மை - Naturalஇங்குகிற தன்மை தன்மை - அடைவுப் பண்பு - Attribute. மனவியல் மனத்தின் தன்மை மட்டும் - disposition. இனி, எண் குணம் பற்றிய சமணர் கொள்கை வருமாறு 1. 380L islan Qulinusla, Infinite Wisdom

(ஞானம்)